வெப் சீரிஸ் வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிக்க சொன்னாரு.. ராஜ் குந்த்ரா மீது நடிகை பரபரப்பு புகார்
மும்பை: வெப் சீரிஸ் வாய்ப்பு தர வேண்டும் என்றால் நிர்வாணமாக நடித்துக் காட்ட வேண்டும் எனக் நிர்பந்தம் செய்தார் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா என நடிகை சகாரிகா சோனா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஆபாச படங்களை தயாரித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தொழிலதிபர் ராஜ் குந்த்ராவின் காம லீலைகள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது.

ஆபாச படங்கள்
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்த குற்றத்திற்காக அதிரடியாக மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். செயலிகள் மற்றும் வெப்சைட்டுகளில் ஆபாச படங்களை தயாரித்து அவர் வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் குவிந்துள்ளன.

திட்டும் ரசிகர்கள்
நடிகை ஷில்பா ஷெட்டி படு கவர்ச்சியாக யோகாவை புரோமோட் செய்து வரும் நிலையில், அவரது கணவர் காம யோகத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறார் என ஏகப்பட்ட ரசிகர்கள் இருவரையும் ட்ரோல் செய்தும் திட்டியும் வருகின்றனர்.

நடிகை புகார்
இந்நிலையில், ராஜ் குந்த்ரா தன்னை நிர்வாணமாக நடிக்க சொன்னார் என நடிகை ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. வெப்சீரிஸ் வாய்ப்பு தேடி அவரிடம் அணுகிய நிலையில், இப்படியொரு இன்னலுக்கு ஆளானேன் என நடிகை சகாரிகா ஷோனா கூறியுள்ளார்.

நிர்வாணமாக ஆடிஷன்
ஆகஸ்ட் 2020ல் வெப்சீரிஸ் வாய்ப்பை தனக்கு வழங்க இயக்குநர் உமேஷ் கமாத் ஜூம் காலில் ஆடிஷன் செய்தார். அந்த ஆடிஷனில் தயாரிப்பாளர் ராஜ் குந்த்ராவும் இடம்பெற்று இருந்தார். அப்போது என்னை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என அவர் கட்டாயப்படுத்தினார் என்றும் சகாரிகா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

பார்ன் நடிகைகளாக
இதே போல பல பெண்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளார் ராஜ் குந்த்ரா என்கிற குற்றச்சாட்டும் ஏகப்பட்ட ஆதாரங்களுடன் வெளியான நிலையில் தான் மும்பை குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு அதிரடியாக ராஜ் குந்த்ராவை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











