இணையதளங்களில் ஆபாசப் படங்கள் - பிரபல தமிழ் நடிகை புகார்
சென்னை: இணையதளங்களில் தனது ஆபாசப் படங்கள் வெளியாகியுள்ளதாகப் பரபரப்புப் புகார் கொடுத்துள்ளார் பிரபல தமிழ், தெலுங்கு நடிகையான நவ்நீத் கவுர்.
தமிழில் விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்தவர் நவ்நீத் கவுர். கருணாசுடன் அம்பாசமுத்திரம் அம்பானி படத்திலும் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணம்
நவ்நித் கவுருக்கும் மகராஷ்டிரா மாநிலம் பத்னேரா சட்டமன்ற தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவுக்கும் 2011-ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு நவ்நீத் கவுர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

அரசியல்
தற்போது நவ்நீத் கவுர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணயாற்றி வருகிறார். வரும் தேர்தலில் போட்டியிடவும் தயாராகி வருகிறார்.

ஆபாச படங்கள்
இந்த நிலையில் அவரது ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றிலும் இந்த படங்கள் அனுப்பப்படுகின்றன. அரைகுறை ஆடையில் அவர் ஆபாசமாகத் தோன்றும் படங்கள் பரபரப்பாக பரவி வருகின்றன.

போலீசில் புகார்
இதனால் நவ்நீத் கவுர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த படங்களை இன்டர்நெட்டில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பொதுவாழ்க்கையில்...
நவ்நீத் கவுர் கணவரும் எம்.எல்.ஏ.வுமான ரவிராணா கூறும்போது, "நவ்நீத் கவுருக்கு பொது வாழ்க்கையில் உள்ள நல்ல பெயருக்கு களங்கள் ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த படங்களை பரவவிட்டுள்ளனர்," என்றார்.


Click it and Unblock the Notifications











