கைது செய்யப்பட்டுள்ள சஞ்சனா, ராகிணி மொபைல் டேட்டாக்களில் நடிகைகளின் ஆபாச படங்கள்.. போலீஸ் அதிர்ச்சி
பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகைகள், பாலியல் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை தொடங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
போதை பொருள் விவகாரம், கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திரஜித் லங்கேஷ்
கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகப் புகார் கூறியிருந்தார். இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைத்ததால் இது பரபரப்பை ஏற்படுத்தியது.

சஞ்சனா கல்ராணி
இதையடுத்து போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்ட்ரிதா ராய்
இதில் மற்றொரு கன்னட நடிகையான ஆண்ட்ரிதா ராய், அவர் கணவரும் நடிகருமான திகாந்த் ஆகியோரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவகள் போதைப் பொருளை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில் நடிகை ராகிணி திவேதியும் சஞ்சனா கல்ராணியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ் அப் குரூப்
இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் இந்த விவாகரத்தில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நடிகைகள் சிலர் ஆபாசப்பட வாட்ஸ் அப் குரூப் ஒன்றை தொடங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நடிகை ராகிணியும், சஞ்சனாவும் இருந்துள்ளனர்.

பழைய டேட்டா
போதைப் பொருள் விவகாரத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன் அதை டெலிட் செய்துள்ளனர். போதைப் பொருள் வழக்கில் வேறு ஏதும் தகவல்கள் கிடைக்கிறதா என்பதை அறிய, அவர்கள் செல்போன்களில் இருந்து, அழிக்கப்பட்ட பழைய டேட்டாக்களை போலீசார் தேடி எடுத்தபோது இது தெரிய வந்துள்ளது.
Recommended Video

ஆபாச புகைப்படங்கள்
அதில் சில நடிகைகளின் நிர்வாண செல்பி மற்றும் ஆபாச புகைப்படங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. சில மாடல்களின் நிர்வாணப் புகைப்படங்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள போலீசார், பாலியல் விவகாரம் தொடர்பாக சம்பந்தப் பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இது கன்னட சினிமாவில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











