twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்

    சுவாதி கொலை வழக்கை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'நுங்கம்பாக்கம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

    |

    சென்னை: தமிழகத்தையே உலுக்கிய இளம்பெண் சுவாதி படுகொலை சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ' நுங்கம்பாக்கம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை சூலைமேட்டைச் சேர்ந்த 24 வயது பெண் மென்பொறியாளர் சுவாதி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், தற்கொலை செய்துகொண்டார். பிறகு இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துவிட்டது.

    Nungambakkam movie trailer launched

    நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் உண்மையாக என்ன நடந்தது என்பதில் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன், சுவாதி கொலை வழக்கு என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை உருவாக்கினார்.

    இந்த படத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கதையில் சில மாற்றங்களை செய்து 'நுங்கம்பாக்கம்' படத்தை எடுத்துள்ளார்.

    ஜெயசுப ஸ்ரீ புரோடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சினேகன், அஜ்மல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

    டிரெய்லர் வெளியீட்டுக்கு பின்னர் பேசிய இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன், " இந்த படத்தை எடுத்துவிட்டு நான் படாதாபாடு பட்டுவிட்டேன். ஜெயிலுக்கு போகாதது என்று தான் குறை. பெங்களூருவுக்கு சென்று ஓடி, ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தேன். பிறகு, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை கேட்டு, கதையில் மாற்றம் செய்து படத்தை எடுத்துள்ளேன்.

    இந்த படத்தில் எந்த குடும்பத்தையும் காயப்படுத்தும் காட்சிகள் இருக்காது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக தான் இந்த படத்தை எடுத்துள்ளேன். பொது இடங்களில் பெண்களுக்கு இதுபோன்ற நடக்க நேரிட்டால், மற்றவர்கள் தடுக்க வர வேண்டும் என்பது தான் என் நோக்கம்"

    இவ்வாறு எஸ்.டி.ரமேஷ் செல்வன் பேசினார்.

    இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என விழாவில் கலந்துகொண்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.

    English summary
    The trailer of tamil movie 'Nungambakkam' was launched yesterday. This movie is taken based on the true incident of young software engineer Swathi murder case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X