ஹரிஷ் கல்யாண்,பிரியா பவானி சங்கரின் ஓமணப்பெண்ணே படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

சென்னை : ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இணைந்து நடித்துவரும் திரைப்படம் ஓமணப்பெண்ணே

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான பெல்லி சூபுளு படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே ஓமணப்பெண்ணே படத்திலிருந்து லேஸி சாங் என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது இரண்டாவது சிங்கிள் போதை கணமே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சாக்லேட் பாய்

சாக்லேட் பாய்

பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண்ணுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எக்கச்சக்கமாக அதிகமாக உள்ளனர் குறிப்பாக பெண் ரசிகர் கூட்டம் அதிகமாக உள்ளது எனவே தொடர்ந்து காதல் படங்களில் நடித்துவரும் ஹரிஷ் கல்யான் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்டு வருகிறார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, கன்னிராசி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் இப்பொழுது ஓமணப் பெண்ணே என்ற படத்தில் நடித்து வருகிறார் இதில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் .

பெல்லி சூபுளு

பெல்லி சூபுளு

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இந்த படத்தில் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படம் பிரபல தெலுங்கு படத்தின் ரீமேக். இப்பொழுது தென்னிந்தியாவின் ஐகானாக மாறியுள்ள விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்த பெல்லி சூபுளு திரைப்படத்தின் ரீமேக்தான் ஓமணப்பெண்ணே. விஜய் தேவரகொண்டா வுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை ரிது வர்மா நடித்திருப்பார். திருமணம் செய்துகொள்ள இருந்த இருவரும் பின் நண்பர்களாக பழகி தனியாக தொழில் ஆரம்பித்து பின் எவ்வாறு சேர்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

ஓமணப்பெண்ணே

ஓமணப்பெண்ணே

தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது பெல்லி சூபுளு படம் இப்பொழுது தமிழில் ஓமணப்பெண்ணே என்ற பெயரில் இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகி உள்ளது. விஜய் தேவர்கொண்டா கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண்ணும் ரிது வர்மா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க படப்பிடிப்பு தளத்தில் இருவரும் எடுத்துக் கொண்ட சில க்யூட்டான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின. சில வாரங்களுக்கு முன்பு ஓமணப்பெண்ணே படத்தின் முதல் சிங்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது.

போதை கணமே

போதை கணமே

இப்பொழுது இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. போதை கணமே என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் இப்போது வெளியாகி இணையதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையில் மயங்க வைக்கும் ரொமான்டிக் பாடலாக போதை கனவே உருவாகி இருக்க அதனை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்த வருட இறுதிக்குள் படமும் வெளியாக உள்ளது. இதற்கிடையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் இயக்குனர் சசியின் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் இந்தியன்2, ருத்ரன், ஹாஸ்டல், பத்து தல என கை நிறைய படங்களில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ள குருதி ஆட்டம் மிக விரைவிலேயே ரிலீஸாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X