தில்லு முல்லு ரீமேக் - ஒரிஜினல் தயாரிப்பாளர் எதிர்ப்பு - பாலச்சந்தர் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ்

ரஜினி- மாதவி, தேங்காய் சீனிவாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் தில்லு முல்லு. இந்தப் படத்தை கே பாலச்சந்தர் இயக்கினார்.
1981-ல் வெளியான இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போவதாகவும், அதனை பாலச்சந்தரின் மகள் நிர்வகிக்கும் கவிதாலயா தயாரிக்கும் என்றும் சமீபத்தில் அறிவித்தனர். அந்தப் படத்தில் சிவா நாயகனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தின் ஒரிஜினல் உரிமையாளரான கலாகேந்திரா மூவிஸ் உரிமையாளர் விஜயலட்சுமி கவிதாலயாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
'தில்லு முல்லு' படத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. எங்கள் அனுமதியின்றி படத்தை ரீமேக் செய்யக்கூடாது என்று தனது வக்கீல் ஆனந்தன் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் விஜயலட்சுமி.
Comments


Click it and Unblock the Notifications