ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 17ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

கெட்டிமேளம்: நேற்றைய எபிசோடில் லட்சுமி மகேஷின் சட்டையை பிடித்து என் புருஷனை என்னடா பண்ண என்று கேள்வி எழுப்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம். அனைவரும் மகேஷை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர், லட்சுமி அவ உங்க அம்மாவா? அவ என்னோட ப்ரண்ட் சிவகாமி என்று முருகனின் அம்மா குறித்த விஷயங்களை சொல்கிறாள்.

அடுத்து துளசி முருகன் அண்ணாவும் நீயும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தீங்க, அவரை தத்தெடுக்க வராங்க என்று தெரிந்ததும் அவர் ஊமையாகவும் காது கேக்காத மாதிரியும் பண்ணிடீங்க என்று நடந்த விஷயங்களை சொல்கிறாள். மகேஷ் நானும் முருகனும் நெருங்கிய நண்பர்கள், எங்க ரெண்டு பேரை மாதிரி ஒரு பெஸ்ட் ப்ரண்ட்டை எங்கயும் பார்க்கவே முடியாது.. அப்படி இருக்கும் போது நான் ஏன் இப்படி பண்ணேன் தெரியுமா என்று மகேஷ் தான் செய்ததை நியாயப்படுத்தி பேச முயற்சிக்கிறான். ஒரு கட்டத்தில் என் அப்பாவையும் நீ தான் கொன்னுட்டேனு எனக்கு தெரியும் என்று ஆவேசப்படும் அஞ்சலி இந்த தாலி என் கழுத்தில் இருக்கிறதுனால தானே நீ உறவு கொண்டாடுற, எனக்கு இந்த தாலியே வேணாம் என்று கழட்டி எரிந்து தூக்கி வீசுகிறாள். அடுத்து அங்கு வந்த போலீஸ் மகேஷை கைது செய்து அழைத்து செல்கின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: சண்முகம் ரூமுக்கு வரும் பரணி, ரத்னா, வீரா ஆகியோர் அவர்களுக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டாங்க, நாம எப்போ நம்முடைய வாழ தொடங்குறது என்று காதலோடு பேசுகிறாள். இதனை தொடர்ந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து பலகாரம் சாப்பிட்டு சாப்பிடுகின்றனர். சண்முகம் பட்டாசு கடையில் கிடைத்த லாபத்தை எல்லாருக்கும் பிரித்து கொடுக்கிறான்.வெட்டுக்கிளி மற்றும் உடன்குடிக்கு லாபத்தில் ஒரு பகுதியை கொடுத்த சண்முகம் முத்துபாண்டிக்கும் பணத்தை கொடுக்க அதை அவன் வாங்க மறுக்கிறான். சண்முகம் உழைப்பு தான் என்னடையது, முதலீடு உன்னுடையது தான் என்று சொல்லி பணத்தை கொடுக்க முத்துபாண்டியும் வாங்கி கொள்கிறான். பின் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில் ருக்குமணி இசையின் ஜாதகத்தை எரித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என திட்டம் போடுகிறாள். ஆனால், ஜாதகத்தை எரிக்க நினைத்த போது நடுங்குகிறது. இதனால், அதை அமெரிக்காவிற்கு செல்லும் ஒரு போட்டோ பிரேம்மில் வைத்துவிடுகிறாள். இசையிடம் சண்டை போடுவதற்காக விஷால் வீட்டுக்கு வர விஷாலை பார்த்துவிட்ட. இசை பின் பக்கமாக சுவர் ஏறி குதித்து வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகி ஓடுகிறாள். பிறகு இசை கோவிலுக்கு வர அங்கு பானுமதியை சந்திக்கிறாள். பானுமதி என் பொண்ணு தீப்தி தான் சுப்ரதா வீட்டு மருமகள் என்று சவால் விட என் தங்கச்சி தான் அந்த வீட்டுக்கு மருமகளாவாள் என்று பதிலுக்கு சவால் விடுகிறாள்.

இதையடுத்து இசை கடைக்கு வர அங்கு விஷால் காத்துக் கொண்டிருக்க அவனிடம் சிக்கிக் கொள்கிறாள். விஷால் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை என்று சொல்ல இசை என் தங்கச்சியோட கல்யாணம் முடிகிற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க அதுக்கப்புறம் நானே விலகி போயிருவேன் என கெஞ்சுகிறாள். ஆனால் விஷால் என்னால பொறுமையா இருக்க முடியாது இப்பவே நான் என் அம்மாகிட்ட எல்லாம் ஒன்னும் இல்லன்னு சொல்லப் போறேன் என்று கிளம்பி செல்கிறான். விஷால் வேக வேகமாக வீட்டுக்கு வர சுப்ரதா நேத்து கடன் செய்வதற்காக கோவிலுக்கு சென்று இருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. பிறகு விஷால் கோவிலுக்கு வர இசை அவனிடம் கெஞ்சியபடி பின்தொடர்ந்து வருகிறாள். விஷால் கோவிலுக்கு வந்து பார்க்க சுப்ரதா அலகு குத்தி தேர் இழுக்க அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X