This week Movies: இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

சென்னை: ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான சலார் திரைப்படம் கடந்த வாரம் தியேட்டரில் வெளியானது. பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான இத்திரைப்படம் நல்ல வசூலை அள்ளி வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல், சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக இந்த ஆண்டு நிறைய சிறு பட்ஜெட் திரைப்படங்கள் வெளியானது. அதனால் புதுப்புது இயக்குனர்கள் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu to Queen Elizabeth here the list of theatre release movies on december 29

அந்த வகையில் வருகிற டிசம்பர் 29ந் தேதி தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குனர்களின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஓடவும் முடியாது ஒலியும் முடியும்(தமிழ்): ஓடவும் முடியாது ஒலியும் முடியும் என்ற திரைப்படத்தை ரமேஷ் வெங்கட் எழுதி இயக்கி உள்ளார். திகில் திரைப்படமான இப்படத்தில் விஜய் குமார், ஹரிஜா, பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.

ரூட் நம்பர் 17(தமிழ்): பிரபல நடிகர் ஜீவா அவர்களின் சகோதரும், ஆர்.பி சவுதிரியின் மகனுமான ஜித்தன் ரமேஷ் நடித்திருக்கும் திரைப்படம் ரூட் நம்பர் 17. இயக்குனர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்ட நிலையில், இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அதாவது டிசம்பர் 29ந் தேதி வெளியாக உள்ளது.

மூத்தகுடி(தமிழ்): தி ஸ்பார்க்லாண்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் திரைப்படம் மூத்தகுடி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கேஆர் விஜயா அவர்கள் இப்படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றுகிறார். சாவி படத்தின் கதாநாயகன் பிரகாஷ் சந்திரா இப்படத்தை தயாரிப்பதோடு, படத்தின் நாயகனாக நடித்துள்ளார். 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் கதாநாயகன் தருண்கோபி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பரி 29ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது

Devil - The British Secret Agent(தெலுங்கு): டெவில் -தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் திரைப்படத்தை நவீன் மேடாரம் இயக்கி உள்ளார். இப்படத்தில் நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா மேனன், சத்யா அக்கலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார், தம்மிராஜு படத்தொகுப்பு செய்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் இத்திரைப்படம் டிசம்பர் 29ந் தேதி வெளியாக உள்ளது.

பப்பில்கம்(தெலுங்கு): தொகுப்பாளினி சுமாவின் மகன் ரோஷன் கனகலா நடித்துள்ள பப்பில்கம் திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை மானசா சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், அனுஹாசன், பிந்து சவுந்திரி ஆகியோர் நடித்துள்ளார்.

குயின் எலிசபெத்(மலையாளம்): பிரபல மலையாள இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குயின் எலிசபெத். இந்த படத்தில் நரேன், மீரா, இப்படத்தில் ஸ்வேதா மேனன், ரமேஷ் பிஷாரடி, வி.கே.பிரகாஷ், ரஞ்சி பணிக்கர், ஜானி ஆண்டனி, மல்லிகா சுகுமாரன், ஜூட் அந்தோணி ஜோசப், ஆர்யா ஸ்ருதி ரஜினிகாந்த், பேர்ளி மணி, சானியா பாபு, நீனா குருப் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாளத் திரைப்படமான இப்படம் டிசம்பர் 29ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X