சந்தேகத்தால் சண்டைப்போட்ட மனைவி.. 32 வயது இளம் பாடகர் விஷம் குடித்து தற்கொலை.. என்ன நடந்தது?

பெங்களூர்: ஒடிசாவை சேர்ந்த பிரபல ராப் இசை பாடகர் அபினவ் சிங் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

ஜாகர்னட் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த அபினவ் சிங் ஒடிசாவில் பிறந்து வளர்ந்து பிரபல ராப் இசை பாடகராக மாறினார். கடந்த சில வருடங்களாக பெங்களூரில் வசித்து வந்தார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை வெடித்து வந்த நிலையில் தான் இப்படியொரு சோகமான முடிவை அவர் மேற்கொண்டதாக கூறுகின்றனர்.

Odia rapper Abhinav Singh suicide celebrity death

தனது மகன் மரணத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக மனைவி உள்ளிட்ட அவரது உறவினர்கள் மீது அபினவ் சிங்கின் தந்தை புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

32 வயது பாடகர் தற்கொலை: ஒடிய மொழியில் ராப் இசை பாடல்களை பாடி பிரபலமானவர் தான் அபினவ் சிங். 32 வயதே ஆகும் அவர் திருமணம் ஆனதில் இருந்தே மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வெடித்து வந்ததாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. கணவரது நடத்தைக் குறித்து சந்தேகப்பட்டு கடைசியாக அவரது மனைவி சண்டை போட்ட நிலையில் தான் துக்கம் தாங்காமல் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார் என பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Odia rapper Abhinav Singh suicide celebrity death

மனைவியிடம் விசாரணை: அபினவ் சிங்கின் மரணத்துக்கு அவரது மனைவி தான் காரணம் என அபினவ் சிங்கின் தந்தை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களிடம் முதல் கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். அபினவ் சிங்கின் உடலை பெற்றோர்களிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். ஒடிசாவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்கொலை கடிதம் இல்லை: தனது மனைவியால் தான் தற்கொலை செய்துக் கொண்டேன் என்பது போன்று எந்தவொரு கடிதத்தையும் அவர் எழுதி வைக்கவில்லை என்றும் அபினவ் சிங்கின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என்றும் அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறுகின்றனர். கட்டாக் ஆந்தம் பாடி பிரபலமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X