Odisha Train Accident: வெட்கக்கேடு.. 3 ரயில்கள் எப்படி மோதும்.. காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் காட்டம்!

மும்பை: நாட்டையே உலுக்கியுள்ள கோரமண்டல் ரயில் விபத்து குறித்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி காட்டமாக பதிவிட்டுள்ளார்.

ஒடிசா அருகே கோரமண்டல் ரயில், பெங்களூர் ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 288 பேர் பலியாகி உள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், 900க்கும் அதிகமானோர் காயம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறுகின்றனர்.

Odisha Train Accident: The Kashmir Files Director Vivek Ranjan Agnihotri slams officials

3 ரயில்கள் மோதி விபத்து: ஓடிசா மாநிலம் பல்சோர் மாவட்டம் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே நேற்று மாலை எதிர்பாராத விதமாக இப்படியொரு பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இந்த விபத்தின் காரணமாக அருகே வந்த பெங்களூர் - ஹவுரா ரயிலும் விபத்திற்குள்ளானதில் உயிரிழப்புகள் அதிகமாக ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் காட்டம்: 3 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த ரயில் விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து, நடிகை பிரியா ஆனந்தை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியும் ட்வீட் போட்டுள்ளார்.

வெட்கக்கேடு: "Tragic and very shameful. How can 3 trains be involved in this age and time? Who is answerable? Prayers for all the families. Om shanti." ("ரொம்பவே வெட்கக் கேடான ஒரு விஷயம் இது.. இந்த காலத்தில் இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சி பாதுகாப்பு அம்சங்கள் வளர்ந்த பின்னர் எப்படி 3 ரயில்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்துக்குள்ளாகும். இதற்கு யார் பொறுப்பேற்க போவது? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.. ஓம் சாந்தி!") என தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X