twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிருத்திகா உதயநிதியின் வணக்கம் சென்னைக்கு வரிவிலக்கு கொடுத்த அதிகாரி மாற்றம்!

    By Shankar
    |

    தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் உருவாகியுள்ள வணக்கம் சென்னை படத்துக்கு வரிவிலக்கு கொடுத்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    வணக்கம் சென்னை படம் வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தில் சிவா, பிரியா ஆனந்த் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. இதற்கு முன்னதாக ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் நீர்ப்பறவை படங்களுக்கும் இது போன்ற சிக்கல் ஏற்பட்டது.

    இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "எங்கள் படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். வரி விலக்கு அளிக்கலாம் தொடர்பாக கையெழுத்திட்ட அதிகாரி ஒருவர் இடமாறுதலுக்குள்ளானார்.

    அந்த அதிகாரி வணக்கம் சென்னை படத்திற்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டதற்காக இட மாறுதலுக்கு உள்ளாகி இருப்பதற்காக நாங்கள் மிக வருத்தப்படுகிறோம்.

    Vanakkam Chennai

    எனினும் அரசின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் நான் ஓயப்போவதில்லை. தமிழ் சினிமாவின் 100-வது வருடத்தை கொண்டாடி வருகிறோம். கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் நீதிமன்றத்திற்கு செல்லும். நல்லதே நடக்கும் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

    வரி விலக்கு இல்லாமல்தான் இப்போது வணக்கம் சென்னை படம் வெளியாகியுள்ளது.

    English summary
    Udhayanidhi Stalin, the producer of Vanakkam Chennai says that the Govt of TN has transferred an officer for signing tax exemption papers in favour of Vanakkam Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X