Ananya Rao Evicted: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் முதல் எலிமினேஷன் இவங்க தான்.. தப்பித்த பவா!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எலிமினேட் இருக்குமா, இல்லை டபுள் எவிக்ஷன் இருக்குமா? என ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்து வந்த நிலையில், அனன்யா ராவ் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
எப்படியும் வயதான போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் நாமினேட் ஆன நிலையில், இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர்.
ஆனால், கடைசியில் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் பவா செல்லதுரை பெயரை சொன்ன நிலையில், ஒருவர் கூட சொல்லாத அனன்யா ராவ் எவிக்ட் ஆகி உள்ளார்.
அனன்யா ராவ் எலிமினேட்: பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக இந்த சீசனில் அனன்யா ராவ் எலிமினேட் ஆகி உள்ளார். மாடல் அழகியான அனன்யா ராவ் சின்ன பிக் பாஸ் வீட்டில் சிக்கிய நிலையில், முதல் வாரத்தில் எந்தவொரு டாஸ்க்கும் செய்யாமல், வீட்டு வேலைகளை மட்டும் செய்து வந்த அனன்யா ராவ் எவிக்ட் ஆகி பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களையே ஷாக் ஆக்கி உள்ளார்.
டாட்டூ பிரச்சனை: உடம்பில் பல இடங்களில் டாட்டூ குத்திக் கொண்டிருக்கும் அனன்யா ராவ் பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு போட்டியாளரும் அவரது பெயரை எவிக்ட் ஆவார் என சொல்லாத நிலையில், எவிக்ட் ஆகி அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளார். விசித்ராவுக்கும் இடையே டாட்டூ பிரச்சனை வந்த நிலையிலும், அனன்யாவுக்கு வெளியே ரசிகர்களே இல்லாத நிலையில் தான் அவர் முதல் வாரத்திலேயே வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பித்த பவா: பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் பவா தான் முதல் பலி ஆடு என குறிப்பிட்டு சொன்னார்கள். ஒரு சிலர் ஐஷு பெயரை சொன்னார்கள், ஆனால், யாருமே அனன்யா பெயரை சொல்லவில்லை. மாயா தெளிவாக பவாவுக்கு வெளியே நிறைய ரசிகர்கள் இருக்கார்கள், அவருக்கு ஓட்டுக்கள் அதிகமாக கிடைக்கும் வெளியேற மாட்டார் என்றார். கடந்த சில சீசன்களிலும் வெளியே ரசிகர்களை ரெடி பண்ணிட்டு வீட்டில் வந்து தூங்கிக் கொண்டிருந்தாலே பிக் பாஸில் பல நாட்கள் தூங்கி டைட்டிலையும் வெல்லலாம் என்கிற அளவில் நிகழ்ச்சி மாறி விட்டது வருத்தத்தையே அளிக்கிறது.


Click it and Unblock the Notifications











