கார்த்திக் ராஜா தலைமையில் இளையராஜா ரசிகர்கள் மன்றம்... இசைஞானி வார இதழ்!

By Shankar

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் ரசிகர்களை ஒருங்கிணைக்க இளையராஜா ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறார்கள்.

இந்த மன்றத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா தலைவராகவும், தயாரிப்பாளர் பி வேலுச்சாமி மற்றும் இயக்குநர் ரத்னகுமார் ஆகியோர் மேனேஜிங் ட்ரஸ்டிகளாகவும் இருப்பார்கள்.

ஏப்ரல் 5-ம் தேதி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மதுரையில் நடக்கும் இளையராஜாவின் சங்கீதத் திருநாள் நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.

அதே நாளில் இசைஞானி என்ற வாரப் பத்திரிகையும் வெளியாகிறது.

அறிக்கை

அறிக்கை

இதுகுறித்து இன்று கார்த்திக் ராஜா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

இசைஞானி இளையராஜாவிற்கு உலகமுழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம் விருபிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கினைக்கும் அமைப்பு தான் இளையராஜா ரசிகர்கள் மன்றம் ("ILAYARAJA FANS CLUB")

இளையராஜா அங்கீகாரம்

இளையராஜா அங்கீகாரம்

இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது புதல்வர் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் துவங்கப்படும் ஒரு அமைப்பு இது.

அதிகாரப்பூர்வ அமைப்பு

அதிகாரப்பூர்வ அமைப்பு

இந்த அமைப்பு மட்டுமே இளையராஜா ரசிகர்களுக்காக அதிகாரப்பூர்வமாக செயல்படும் உரிமை கொண்டது.

சமூக நற்பணிகள்

சமூக நற்பணிகள்

இசைஞானியின் ரசிகர்கள் அவரது இசையால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கென சில கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் அவர்களை நல்வழிப்படுத்திய இசைஞானி அவர்களின் ரசிகர்கள் சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக நற்பணிகள், சமூக முன்னேற்றத்திற்கென ஆக்கப் பூர்வமான செய்வதென முடிவெடுத்து அதனை இந்த இளையராஜா ரசிகர்கள் மன்றம் மூலம் செயலாக்க உள்ளனர்.

ஒரு கோடி பேர்

ஒரு கோடி பேர்

சாதி, மதம், இனம், அரசியல் போன்ற விசயங்களுக்கு அப்பாற்ப்பட்ட அமைப்பு இது. இதில் ஒருகோடி பேருக்கு மேல் உறுப்பினராக சேர உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை ஏப்ரல் ஐந்தாம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் அறிவிக்க உள்ளனர்.

இசைஞானி வார இதழ்

இசைஞானி வார இதழ்

கார்த்திக்ராஜா தலைமையில் "ராஜாவின் சங்கீதா திருநாள்" நிகழ்ச்சி நடைபெறும் ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று "இசைஞானி" என்ற வார இதழும் துவங்கப்பட உள்ளது.

திரைப்படத்துறையில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளும் இதில் இணைந்து செயலாற்ற உள்ளனர்.

ஏற்கெனவே

ஏற்கெனவே

எண்பதுகளில் தொடங்கி ஏற்கெனவே தென் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளையராஜா நற்பணி மன்றங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவற்றை எல்லாம் இப்போது இளையராஜா ரசிகர்கள் மன்றத்தோடு இணைக்கப் போகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X