'2.ஓ' ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை : ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக, அதிக பொருட்செலவில் தயாராகி வரும் படம் '2.O'. ஷங்கர், ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.
இப்படம் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே படம் அன்றைய தினம் வெளிவராது என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், '2.O' ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ரிலீஸ் தாமதம்
அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'பேடு மேன்' இந்தி படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு அந்தத் தகவல் மேலும் உறுதியாக இருந்தது. இருந்தாலும் 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா படம் வெளியீடு பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நேற்று 2.O பட வெளியீட்டைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி படம் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் '2.ஓ' படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
2.ஓ அறிக்கை
லைக்கா நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜு மகாலிங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "லைக்கா ப்ரொடக்ஷன்ஸ், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஷங்கர் ஆகியோரின் சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் படமான 2.O படம் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையிடப்படும்.

அதிக பொருட்செலவு
நாட்டின் அதிகப் பொருட்செலவிலான 3டி படமான இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தொழில்நுட்ப வேலைகள்
உயர்தரமான இறுதிக்கட்ட தொழில்நுட்ப வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. வெளியீட்டிற்கான பணிகளில் படக் குழுவினர் தயாராக உள்ளனர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











