பொன்னியின் செல்வன்... அதிகாரப்பூர்வ நடிகர்கள் பட்டியல் வெளியீடு.. இத சொல்ல இத்தனை நாளா!

பொன்னியின் செல்வன் படத்தின் அதிகாரப்பூர்வ நடிகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் அதிகாரப்பூர்வ நடிகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீடித்து வருகிறது.

அதிகாரப்பூர்வ பட்டியல்

அதிகாரப்பூர்வ பட்டியல்

இந்நிலையில் படத்தின் நடிகர், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், கிஷோர், அஸ்வின் காக்கமனு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வசனம் - ஜெயமோகன்

வசனம் - ஜெயமோகன்

வரும் மாதங்களில் மேலும் சில நடிகர்கள் படத்தில் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்துடன் சேர்ந்து குமரவேல் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஜெயமோகன் தான் படத்திற்கு வசனகர்த்தா. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக தோட்டா தரணி பணியாற்றுகிறார்.

மொத்த படக்குழு

மொத்த படக்குழு

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங், ஷாம் கவுசல் மற்றும் வாசிம் கான் சண்டை பயிற்சி, ஏகா லஹானி ஆடை வடிவமைப்பு, பிருந்தா நடனம், மக்கள் தெடார்பு ஜான்சன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கின்றன. ரூ.800 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் இல்லை

கீர்த்தி சுரேஷ் இல்லை

முன்னதாக இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் இதில் நடிக்கவில்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. ரஜினி படத்தில் நடிப்பதால் தான் கீர்த்தி சுரேஷ், பொன்னியின் செல்வன் வாய்ப்பை நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X