கமல் நலமாக உள்ளார்... அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை

சென்னை : உலக நாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் பரவியதும் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும், தொண்டர்களும் பதறி போயினர்.

Recommended Video

Kamal Hassan -கு கொரோனா தொற்று உறுதி | Bigg Boss 5 Tamil, Isaivani

சினிமா ஷுட்டிங், தனது கதர் நிறுவன துவக்கம், பிக்பாஸ், அடுத்த படங்களுக்கான வேலைகள், அரசியல் பணிகள் என படு பிஸியாக பேலன்ஸ் செய்து கவனித்து வரும் கமலுக்கு என்ன ஆயிற்று என அனைவரும் குழம்பிப் போயினர்.

ட்வீட் போட்ட கமல்

ட்வீட் போட்ட கமல்

இந்நிலையில் தனக்கு என்ன ஆயிற்று என்பது பற்றி கமலே ட்வீட் போட்டார். அதில், அமெரிக்கா பயணத்திற்கு பிறகு லேசான இருமல் இருந்தது. இதற்காக மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும், அனைவரும் கவனமாக இருங்கள் என்றும் எச்சரித்திருந்தார்.

பிரபலங்கள் பிரார்த்தனை

பிரபலங்கள் பிரார்த்தனை

இதனால் கமல் விரைவில் குணமடைய பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிரார்த்தனைகளும் , வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். கமலின் உடல்நிலை எப்படி உள்ளது என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருந்தனர். இந்நிலையில் கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கமல் நலமாக உள்ளார்

கமல் நலமாக உள்ளார்

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் தான் கமல் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மூச்சு குழாயில் ஏற்பட்ட லேசான நோய் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக கமலஹாசன் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாசிற்கு வருவாரா கமல்

பிக்பாசிற்கு வருவாரா கமல்

கமல் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவது சந்தேகம் தான். அதே சமயம், கமல் நடித்து வரும் விக்ரம் படத்தின் ஷுட்டிங் கோவையில் நடந்து வருகிறது. இது கமல் இல்லாமல் தொடர்ந்து நடத்தப்படுமா அல்லது கமல் குணமாகி வரும் வரை ஒத்திவைக்கப்படுமா என தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X