Thalapathy 69: விஜய்யோட கடைசி படம்.. தளபதி 69 ரிலீஸ் எப்போ தெரியுமா?.. வெளியான தரமான அப்டேட்!

சென்னை: கர்நாடகாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தளபதி விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் தளபதி 69 படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. முன்னதாக ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தான் விஜய்யின் தளபதி 69 படத்தை தயாரிக்கும் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், கடைசி நேரத்தில் விஜய் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கேவிஎன் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வேட்டையை இந்தியளவில் நடத்தாத நிலையில், தளபதி ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகியுள்ள நிலையில், அவர்களை மீண்டும் உற்சாகப்படுத்தும் நோக்கில் தற்போது தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

thalapathy 69 vijay

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத் இந்த படத்தை இயக்கவுள்ளார், இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என்கிற அறிவிப்பை கேவிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், தளபதி 69 திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தளபதி 69 அப்டேட்: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் நேற்று முதலே ஏகப்பட்ட பில்டப்புகளை வெளியிட்டு விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்புக்கு ரசிகர்களை தயார் செய்த நிலையில், லோகேஷ் ஸ்டைலில் விஜய் நடித்த இன்ட்ரோ வீடியோவுடன் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஒரே ஒரு போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளனர்.

எச். வினோத் இயக்கத்தில்: தளபதி 69 படத்தை இயக்கப் போவது எச். வினோத் தான் என்றும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்து விட்ட நிலையில், அதை மட்டுமே தற்போது அப்டேட்டாக வெளியிட்டுள்ளனர். தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் நடிகர்கள் என எந்தவொரு தகவலையும் தற்போது வெளியிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பில்டப்பாக அப்டேட்கள் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கையில் தீப்பந்தம்: தளபதி விஜய் கையில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு இருப்பது போன்ற போஸ்டருடன் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், 2026 தேர்தலுக்கு முன்பாக அரசியல் களத்தில் தான் நடிகர் விஜய் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக தளபதி 69 இருக்காது என்றே தெரிகிறது.

thalapathy 69 vijay

ரிலீஸ் எப்போ?: நடிகர் விஜய்யின் படங்கள் சமீப காலமாக ரிலீஸ் மாதத்தை குறித்து விட்டுத்தான் படப்பிடிப்பை தொடங்குகின்றன. கடைசி நேரத்தில் சிஜி உள்ளிட்ட பணிகள் இருந்தாலும் அதை அவசர அவசரமாக முடித்து சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் விஜய் ரொம்பவே கவனமாக உள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தளபதி 69 படம் வெளியாகும் என இப்போதே விஜய் கர்ச்சீப்பை போட்டு வைத்திருக்கிறார். அவருக்கு போட்டியாக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் பெரிய படங்கள் ஏதும் வருமா? வராதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X