Salaar 2: வெறித்தனமான வில்லன்.. அப்டேட்னா இப்படி இருக்கனும்.. சலார் 2 படத்தில் கொரியா நடிகர் டான் லீ
தென் கொரியா: ஹாலிவுட் நடிகர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதோ, அல்லது இந்திய சினிமாவில் வேறு மொழிகளில் நடிப்பது என்பதோ புதிய விஷயம் இல்லை. அதேநேரத்தில் ஹாலிவுட் நடிகர்கள் இந்தியப் படங்களில் நடிக்கும்போது, அந்தப் படங்களுக்கு ஏற்படும் எதிபார்ப்பு என்பது எப்போதும், தனிதான். அப்படியான நிலையில் நடிகர் பிரபாஸ்ஸின் நடிப்பில் உருவாகவுள்ள சலார் 2 படத்தில் தென் கொரிய சினிமாவின் உச்ச நடிகராக உள்ள நடிகர் டான் லீ நடிக்கவுள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக டான் லீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி படத்திற்குப் பிறகு தென்னிந்திய சினிமாக்கள் மீது எப்போதும் தனி எதிர்பார்ப்பும் பார்வையும் இந்திய அளவில் மட்டும் இல்லாமல், உலக அளவிலும் ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி பாகுபலி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாக்களுக்கு புது உத்வேகத்தை ஊட்டிய நடிகர் பிரபாஸ் தற்போது உலக சினிமா கவனிக்கும் இடத்தில் உள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கல்கி 2898 ஏ.டி படம் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 1300 கோடிகள் வரை வசூல் செய்தது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல், இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் சலார். இந்தப் படத்தில் இவருடன் நடிகர் பிரித்விராஜ் சுகுமாறனும் நடித்திருந்தார். இந்தப் படத்தினை கே.ஜி. எஃப் படத்தினை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கினார். மேலும் இந்தப் படத்தினை கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஹம்பாலே நிறுவனம் தயாரித்தது. சலார் படம் பாக்ஸ் ஆபிஸில் உலக அளவில் சுமார் ரூபாய் 650 கோடியில் இருந்து ரூபாய் 700 கோடிகளை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
சலார் 2: மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹம்பாலே நிறுவனத்தின் தரப்பில் இருந்து சலார் படத்தின் இரண்டாம் பாகத்துடன் சேர்த்து, பிரபாஸின் மூன்று படங்களைத் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது பிரபாஸ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதுமட்டும் இல்லாமல், பிரபாஸ் கையில் ஏற்கனவே அடுத்த 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை படங்கள் கைவசம் இருப்பதால், பிரபாஸ் செம பிசியாக உள்ளார் எனலாம்.

பிரபாஸ்: மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தினை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் யோசனை செய்தால் அவர்கள் மனதில் உடனே தோன்றும் நடிகராக பிரபாஸ் தான் உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபாஸின் அடுத்தப் படத்தில் வெளிநாட்டு நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அது பிரபாஸ்ஸின் ஸ்பிரிட் படமா அல்லது சலார் படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. மேலும் இது உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.
டான் லீ: இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சலார் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வந்தது. தற்போது தென் கொரிய நடிகர் டான் லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சலார் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, தம்ஸ் -அப் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் செம குஷி ஆகியுள்ளனர். இந்தியாவில் தென் கொரிய படங்களுக்கும் நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு எப்போது உள்ளது. அந்த வகையில் நடிகர் டான் லீ சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ள தகவல் பிரபாஸ் ரசிகர்களை மட்டும் இல்லாமல், டான் லீ ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











