அந்த காரணத்திற்காகத்தான் நாடியா வெளியேற்றப்பட்டாரா? டஃப் போட்டியாளர்னு பாராட்டிய ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் நபராக வாக்குகளின் அடிப்படையில் நாடியா சங் வெளியேறி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக கமல் அறிவித்துள்ளார்.

சின்னப் பொண்ணு அல்லது அபிஷேக் ராஜா தான் வெளியேறுவார் என கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியான நிலையில், நாடியா சங் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

நாடியா வெளியேறும் போது சக ஹவுஸ்மேட்கள் பலரும் அவர் ஒரு டஃப் போட்டியாளர் என வாழ்த்தி அனுப்பினர்.

வனிதாவுடன் ஒப்பீடு

வனிதாவுடன் ஒப்பீடு

டிக் டாக் பிரபலமான மலேசிய போட்டியாளர் நாடியா சங்கை அபிஷேக் ராஜா பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் வனிதா விஜயகுமார் உடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். அதே அபிஷேக் தான் பிக் பாஸ் வீட்டிலேயே காணாமல் போனவர் பட்டியலில் நாடியா சங்கை சேர்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ வெளியேற்றம்

அதிகாரப்பூர்வ வெளியேற்றம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து சொந்த பிரச்சனை காரணமாக அவராகவே வெளியேறினார் என கூறப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது நாடியா சங் தான். ஏற்கனவே இவர் தான் வெளியேறி விட்டார் என தகவல்கள் கசிந்து விட்டன.

கவர்ந்த கதை

கவர்ந்த கதை

போட்டியாளர்கள் பலருக்கும் நாடியா சங்கின் கதை மிகவும் பிடித்து இருந்ததாக சொன்னார்கள். ஆனால், இமான் அண்ணாச்சி நாடியா சங்கின் கதை தனக்கு சரியாக அமையவில்லை என வெளிப்படையாக பேசி இருந்தார். நாடியா சங் சொன்ன கதையில் பொய் இருப்பதாகவும் சில நெட்டிசன்கள் அவரை குறை கூறியிருந்தனர்.

மரண பயத்தை காட்டிட்டாரு

மரண பயத்தை காட்டிட்டாரு

அந்த அளவுக்கு ஓவராக வாய் பேசின அபிஷேக் ராஜாவை கடைசி வரை வைத்து நாடியா சங்கை எலிமினேட் பண்ண நிலையில், அபிஷேக்கிறகு மரண பயத்தை காட்டிவிட்டார் கமல் என நெட்டிசன்கள் அபிஷேக்கை பங்கமாக்கி வருகின்றனர். அபிஷேக் தான் குறைந்த ஓட்டுக்களை பெற்றார் என்றும் சில நெட்டிசன்கள் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ட்ராங் போட்டியாளர்

ஸ்ட்ராங் போட்டியாளர்

நாடியா சங் எலிமினேட் ஆனதற்கு ஏகப்பட்ட போட்டியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். அபிஷேக் வெளியேறி இருந்தால் கூட சந்தோஷப்பட்டு இருப்போம் என நிரூப் வெளிப்படையாகவே சொல்லி விட்டார். பலரும் நாடியா சங் ஸ்ட்ராங் போட்டியாளர் என்று பாராட்டி அவரை வழியனுப்பி வைத்தனர்.

காணாமல் போனவர்

காணாமல் போனவர்

இந்த வாரம் காணாமல் போனவர் பட்டியலில் சின்னப் பொண்ணு மற்றும் நாடியா சங் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. அந்த குழுவில் உறுப்பினராக இருந்த அபிஷேக் ராஜா எத்தனை முறை கேமராவில் தென்பட்டாலும் அவருக்கு ஓட்டு போட ரசிகர்கள் தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. கமல் சொன்ன மாதிரி நாடியா இன்னும் முன்னாடி வராமல் போன காரணமா? அல்லது மூன்று பெண் பிள்ளைகளை வீட்டில் விட்டு வந்து விட்டோமே என்கிற சோகமா எது அவரை முதலில் வெளியேற்றியது என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், ஏதோ நடந்திருக்கு என்பது மட்டும் நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X