லாக்டவுனிலும் பார்ட்டியா.. ரஜினி பட ஹீரோயின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார்.. ஆனால்..?

By

மும்பை: லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பார்ட்டி நடத்தியதாக வந்த புகாரை அடுத்து, போலீசார் ரஜினி பட நடிகையின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

Recommended Video

மொட்டை போட்ட நடிகைகள்..இதுக்கு கூட தைரியம் வேணும்

பிரபல முன்னாள் ஹீரோயின் அனிதா ராஜ். பிரேம் கீத், ஸாரா சி ஜிந்தகி, ஸமீன் ஆஸ்மன், மாஸ்டர்ஜி உட்பட ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில், ரஜினிகாந்த், நம்பியார் நடித்த தாய்வீடு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆ.தியாகராஜன் இயக்கி இருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

மும்பை பாந்த்ரா

மும்பை பாந்த்ரா

இதையடுத்து தமிழில் நடிக்காத அனிதராஜ், எண்பதுகளில் இந்தியில் கொடி கட்டி பறந்தார். தொடர்ந்து நடித்து வருகிறார். டி.வி.சிரீயல்களிலும் நடிக்கிறார். சுனில் ஹிங்கோரானி என்பவரை காதலித்து 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அனிதா ராஜ், மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

ஊரடங்கு

ஊரடங்கு

இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லை என்பதால், நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் இதன் தாக்கம் அதிகரித்து வருவது கவலையடைய செய்துள்ளது.

வீட்டில் பார்ட்டி

வீட்டில் பார்ட்டி

குறிப்பாக மும்பையில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் அங்கு உயிரிழந்துள்ளனர். இதை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் வெளியில் யாரும் வரவேண்டாம் என்றும் அம்மாநில அரசு கூறி வருகிறது. மக்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதற்கிடையே, இந்த கண்காணிப்பையும் கொரோனா தாக்கத்தையும் மீறி, நடிகை அனிதா ராஜ் வீட்டில், பார்ட்டி நடப்பதாக போலீசுக்கு தகவல் பறந்தது.

போலீசுக்கு தகவல்

போலீசுக்கு தகவல்

அவர் வீட்டின் அருகில் வசிப்பவர் ஒருவர் கூறும்போது, லாக்டவுன் அறிவிக்கப்பட்டதும் எங்கள் குடியிருப்பு சொசைட்டி, வெளியாட்கள் உள்ளே வர தடை விதித்துவிட்டது. ஆனால், அதையும் மீறி, அனிதா ராஜ் வீட்டில் விருந்தினர்கள் வருவதும் பார்ட்டி நடப்பதும் தெரியவந்தது. திங்கட்கிழமை இரவு இப்படி நடந்த போது அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தோம் என்றனர்.

தெரிவிக்க வேண்டுமா?

தெரிவிக்க வேண்டுமா?

விரைந்து வந்த போலீசார் அவர் வீட்டுக்குள் வந்து சோதனை செய்தனர். பின்னர் விசாரித்து விட்டு சென்றுவிட்டனர். அதற்குப் பின் அந்த சொசைட்டி செக்யூரிட்டிகளிடம் அனிதா ராஜூம், அவர் கணவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசிடம் யார் தகவல் சொன்னதும் என்றும் எங்கள் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு நாங்கள் தெரிவிக்க வேண்டுமா? என்றும் அவர்கள் கேள்விகேட்டனர்.

மறுக்கவில்லை

மறுக்கவில்லை

இதுபற்றி அனிதா ராஜ் கூறும்போது, 'என் கணவர் மருத்துவர். அவரது நண்பர் ஒருவர் மருத்துவ அவசரத்துக்காக எங்கள் வீட்டுக்கு வந்தார். அவருக்குத் துணையாக அவர் மனைவியும் வந்தார். என் கணவர், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை வரவேண்டாம் என்று மறுக்கவில்லை. இதுதான் நடந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

பகுத்தறிவற்றவர்களா?

பகுத்தறிவற்றவர்களா?

ஆனால், போலீசில் பொய்யான புகாரை கொடுத்துள்ளனர். அவர்கள் வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டு, தவறான தகவல் என்று மன்னிப்புக் கேட்டுவிட்டு சென்றனர் என்று தெரிவித்துள்ளார். இப்படியொரு நேரத்தில் யாராவது பார்ட்டி நடத்துவார்களா? அந்தளவுக்கு பகுத்தறிவு அற்றவர்களாகவா இருக்கிறோம்? என்றும் அவர் ஆவேசமாகக் கேட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X