twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சே வெடித்து விட்டது.. எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவு செய்தி அறிந்த ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கம்

    |

    சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 16க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 42 ஆயிரம் பாடல்களை பாடிய கின்னஸ் சாதனையாளர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்த செய்தியை கேட்டு இந்திய திரை உலகமே கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளது.

    பிரபல இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    ஏ.ஆர். ரஹ்மான், தமன், ஜிப்ரான், இமான் உள்ளிட்ட ஏகப்பட்ட இசையமைப்பாளர்களும் பாடு நிலாவுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    காலமானார் எஸ்.பி.பி

    காலமானார் எஸ்.பி.பி

    பாடும் நிலா பாலு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1:04 மணிக்கு இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றார். அவரது உடல் தான் நம்மை விட்டுப் பிரிகிறதே தவிர இசையாக அவரது ஆன்மா என்றுமே நம்முடன் இருக்கும் என ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    கண்ணீர் கடலில்

    கண்ணீர் கடலில்

    எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம் என்ற தகவல் வெளியான அடுத்த நொடியே ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும் கண்ணீர் கடலில் மூழ்கி உள்ளது. சல்மான் கான் முதல் மகேஷ் பாபு வரை ஏகப்பட்ட இந்திய திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    7ஆம் அறிவு

    7ஆம் அறிவு

    மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஷ் ஜெயராஜ், ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தாலும், அவரது இசையில் ஆரம்ப காலத்தில் எஸ்.பி.பி அதிகமாக. பாடல்களை பாட வில்லை. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் 7ஆம் அறிவு படத்திற்காக ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் எஸ்.பி.பி பாடிய யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடல் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்க முடியது. இரங்கல்

    நெஞ்சே வெடித்து விட்டது

    நெஞ்சே வெடித்து விட்டது

    அதன் பின்னர், ஆர்யாவின் இரண்டாம் உலகம் படம் உள்ளிட்ட சில ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்த படங்களுக்கும் எஸ்.பி.பி பாடியுள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், கடவுளே இந்த செய்தி கேட்டு என் நெஞ்சே வெடித்து விட்டது போல் இருக்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்களுடன் நானும் சேர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். அவர் நமக்கு விட்டுச் சென்ற பாடல்கள் என்றுமே நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் என உருக்கமாக பதிவிட்டு எஸ்.பி.பி., உடன் பணியாற்றிய புகைப்படத்தை வெளியிட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    English summary
    Harris Jayaraj tweet, Oh, God! My heart is broken to pieces along with crores of music lovers hearing his demise. But, I may get back only by the songs he left for us.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X