ஓ மணப்பெண்ணே ரிலீஸ் தேதி வெளியானது!
சென்னை : நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ஓ மணப்பெண்ணே.
தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பெல்லி சூபுளு படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பெல்லி சூபுளு தமிழில் உருவாவதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பெரும் காத்திருப்புக்கு பின்னர் படக்குழு இப்பொழுது அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது.

முதல் முறையாக ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக
கைநிறைய படங்களுடன் மிக பிஸியாக நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் முதல் முறையாக ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓ மணப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

பெல்லி சூபுளு அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா வின் நடிப்பில் வெளியான பெல்லி சூபுளு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். மிக இயல்பான கதைக்களம் ரசிக்கின்ற திரைக்கதை என படம் முழுவதும் அழகான காதல் கதையை படத்தில் காட்டி இருந்தார்கள்.

கொரோனா பரவல் காரணமாக ரிலீஸை
இப்பொழுது தமிழில் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் உருவாகி இருக்க இப்படத்திலிருந்து பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதது. ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தது வைரலாகியது. இந்த நிலையில் திரைப்படத்தின் ரிலீஸை கொரோனா பரவல் காரணமாக படக்குழு நிறுத்தி வைத்திருந்தது. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கி இருக்க, விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

அக்டோபர் 22-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்
திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இப்பொழுது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதன் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியையும் தற்போது படக்குழு அறிவித்துள்ளது . அதன்படி அக்டோபர் 22-ஆம் தேதி ஓ மணப்பெண்ணே இந்த டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி வரும் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரிய பவனி சங்கர் இப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்க திரையரங்குகளில் படம் ரிலீசாகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











