"லிப் லாக்" சீன்ல நடிச்சது ஏன் தெரியுமா.. அனிகா சுரேந்திரன் விளக்கம்.. நயன்தாரா பற்றியும் ஓபன் டாக்
சென்னை: விஸ்வாசம் படத்தில் மகளாக நடித்த அனிகா தற்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் நயன்தாரா குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா. அதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது.

ஹீரோயினாக அறிமுகமாகும் அனிகா
இந்தச் சூழலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா புட்டபொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். தற்போது அவர் மலையாளத்திலும் ஹீரோயினாக களமிறங்கியிருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்திருக்கும் படத்துக்கு ஓ மை டார்லிங் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஒருசேர வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது. படத்தை சாமுவேல் இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது

லிப்லாக் முதல் படுக்கையறை வரை; அதகளம் செய்த அனிகா
முழு நீள காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கின்றனர். அதற்கு காரணம், ஹீரோயின் ஆனதும் ஏகப்பட்ட லிப்லாக்குகள், படுக்கையறை காட்சிகளில் நடித்திருப்பதுதான். அவை ஓ மை டார்லிங் படத்தின் ட்ரெய்லரிலும் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து மலையாளத்தில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே இவ்வளவு தாராளமா என ரசிகர்கள் பேச தொடங்கியிருக்கின்றனர்

லிப்லாக் குறித்து அனிகா சுரேந்திரன் கொடுத்திருக்கும் விளக்கம்
இந்தச் சூழலில் இதுகுறித்து விளக்கமளித்த அனிகா சுரேந்திரன், "ஓ மை டார்லிங் முழு நீள காதல் திரைப்படமாகும் இதில் முத்தக்காட்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்,. இயக்குநர் கதை சொல்லும்போது காட்சியின் முக்கியத்துவத்தையும் சொல்லியிருந்தார். இதில் துளிக்கூட ஆபாசம் இருக்காது. அதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

அந்த விஷயத்தில் நயன்தாரா அப்படித்தான் - அனிகா
இதற்கிடையே ஓ மை டார்லிங் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா நயன்தாரா குறித்து பேசுகையில், "நயன் தாரா மிகவும் ஸ்வீட்டானவர், என்னிடம் எப்போதும் அன்பாக நடந்துகொள்வார். ஆனால் அவர் மேக்கப் போட்டுக்கொள்வதற்கு மட்டும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வார். ஆனால் எல்லா நேரமும் அப்படி செய்யமாட்டார். சில நேரங்களில் மட்டும் அப்படி நடந்துகொள்வார்" என்றார்.


Click it and Unblock the Notifications











