தலைவர் சொல்ற மாறி, ஃபாரின் கார் ஃபாரின் டிரைவர் மொமென்ட்; புது கார் வாங்கிய ஓ மை கடவுளே இயக்குநர்!

சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புதிய கார் வாங்கிய புகைப்படங்களை ஷேர் செய்து போட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஓ மை கடவுளே படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

இந்நிலையில், தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடி காரை வாங்கி பெற்றோருடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார்.

ஓ மை கடவுளே இயக்குநர்

ஓ மை கடவுளே இயக்குநர்

கடந்த ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், ஷாரா மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான காதல் ஃபேண்டஸி திரைப்படம் தான் ஓ மை கடவுளே. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை அந்த படம் பிடித்தது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புது கார்

புது கார்

கடின உழைப்பின் பலனாக தற்போது புதிய ஆடி காரை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வாங்கி உள்ளார். அந்த கார் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனது சந்தோஷத்தை ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்துள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

அம்மாவுக்கு பிறந்தநாள்

அம்மாவுக்கு பிறந்தநாள்

ஓ மை கடவுளே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் அம்மா பிறந்தநாளை முன்னிட்டு இந்த சொகுசு காரை வாங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அம்மா மற்றும் அப்பாவுடன் ஆடி கார் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்திருக்கிறார்.

தலைவர் சொன்ன மாறி

தலைவர் சொன்ன மாறி

நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசும் போது ஃபாரின் கார் மற்றும் ஃபாரின் டிரைவரை வைத்த குட்டி ஸ்டோரியை கூறியிருந்தார். இந்நிலையில், கார் வாங்கிய போட்டோக்களை போட்ட அஸ்வத் மாரிமுத்து, "தலைவர் சொன்ன மாறி, ஃபாரின் கார்.. ஃபாரின் டிரைவர் மொமென்ட்" எனக் குறிப்பிட்டு ஸ்டைலாக கார் உடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

ரஜினிகாந்த் போல தானும் கடினமாக உழைத்து சொகுசு காரை வாங்கி இருக்கிறேன் என ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் ட்வீட் போட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பத்து வருஷம்

பத்து வருஷம்

கடந்த பத்து வருடங்களாக சினிமாவில் கடுமையாக உழைத்ததற்கு கிடைத்த பரிசு தான் இது என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சொகுசு கார் வாங்கியது குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஏகப்பட்ட ரஜினி ரசிகர்கள் ரஜினி போட்டோக்களை ஷேர் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

அடுத்து பாலிவுட்

அடுத்து பாலிவுட்

தமிழில் ஓ மை கடவுளே திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அதே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய எண்ட்மோல் ஷைன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்தே இந்தி படத்தையும் இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின. நடிகர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9 பிரிவுகளில்

9 பிரிவுகளில்

அடுத்த மாதம் தென்னிந்திய சைமா திரைப்பட விருது விழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இதில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர்கள் உள்பட மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் ஓ மை கடவுளே படம் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறது. எத்தனை விருதுகளை இந்த படம் அள்ளப் போகிறதோ என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்களும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் ஓ மை கடவுளே படக்குழுவினரும் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X