இப்படியொரு பெர்த் டே ட்ரீட்டா.. சூப்பர் அசோக் செல்வன்!
Recommended Video
சென்னை: நடிகர் அசோக் செலவன் தனது 30வது பிறந்த நாளை இன்று கொண்டாடியுள்ளார்.
அசோக் செல்வன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஓ மை கடவுளே படத்தில் இடம்பெற்றுள்ள 'ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம்' பாடலை அசோக் செல்வனின் பெர்த் டே ட்ரீட்டாக அவரது ரசிகர்களுக்காக தற்போது ரிலீஸ் செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத்தின் க்யூட் வாய்ஸில் நண்பர்களுக்கான தேசிய கீதமாக இந்த ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம் உருவாகியுள்ளது.
ஹேப்பி பர்த்டே
கூட்டத்தில் ஒருவனாக நம்முடன் என்றும் இருக்கும் அசோக் செல்வனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 1989ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஈரோட்டில் பிறந்த சிங்கம் அசோக் செல்வன். சூதுகவ்வும், பீட்சா 2, தெகிடி, சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்துள்ளார் அசோக் செல்வன்.

ஓ மை கடவுளே
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் இரண்டாவது நாயகியாக அறிமுகமாகிறார்.
ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம்
அசோக் செல்வனின் பிறந்த நாளை முன்னிட்டு சோனி மியூசிக் சவுத் தற்போது, ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தமை ரிலீஸ் செய்துள்ளது. இந்த ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம் பாடலில் மக்களும் பங்கேற்க, ஒரு போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில், பல நண்பர்கள் இணைந்த குழு புகைப்படங்கள் ஓ மை கடவுளே படக்குழுவுக்கு அனுப்பப்பட்டு ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம் லிரிக் வீடியோவில் அவை இடம்பெற்றுள்ளன.
அந்த சர்ப்ரைஸ்
ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தமிற்காக புகைப்படங்களை அனுப்புமாறு நாயகி வாணி போஜன் தனது ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தமை யார் பாடியுள்ளார் என்பது தனக்கு தெரியும். அந்த சர்ப்ரைஸை ரசிகர்களுக்கு சொல்ல முடியவில்லை என ஃபீல் பண்ணினார். தற்போது அந்த பிரபலம் இசையமைப்பாளர் அனிருத் என்பது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











