twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதிதாக காதலிப்பவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓ மை கடவுளே.. என்ன சொல்கிறார் வாணி போஜன்?

    By
    |

    Recommended Video

    OH MY KADAVULEY PRESS MEET | DIRECTOR ASWANTH SPEECH |FILMIBEAT TAMIL

    சென்னை: புதிதாகக் காதலிப்பவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, ஓ மை கடவுளே படம் வாழ்வின் மீதான பார்வையை மாற்றும் விதமாக இருக்கும் என்று நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

    அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகும் படம், ஓ மை கடவுளே. வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    மாடர்ன் காதலை சொல்லும் படம் இது. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தை அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிச்கர்ஸ் அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    சக்தி பிலிம் பேக்டரி படத்தை தமிழகமெங்கும் வரும் 14 ஆம் தேதி வெளியிடுகிறது. விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். லியான் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இதன் டீஸர், புரமோ பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதி இதில் கடவுளாக நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

    வாணி போஜன்

    வாணி போஜன்

    இதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் வாணி போஜன். படம் பற்றி அவர் கூறும்போது,

    இது என் இதயத்துக்கு நெருக்கமான படம். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் மட்டுமே நடித்துவருகிறேன். தெலுங்கில் ஹிட் அறிமுகத்துக்கு பிறகு தமிழில் ஓர் அற்புதமான வாய்ப்பாக, இந்தப் படம் அமைந்திருக்கிறது.

    காதலிக்கும் இளைஞர்கள்

    காதலிக்கும் இளைஞர்கள்

    காதல் கதைகளுக்கென்று ஒரு வடிவம் இருக்கும். இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேன்டஸி தன்மையை புகுத்தி படத்தை அழகாக மாற்றி இருக்கிறார். இந்தப்படம் பேசும் தத்துவ நியாயங்கள் என்னை ஈர்த்தது. இந்தப்படம், புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வின் மீதான பார்வையை மாற்றும் விதமாக அமையும்.

    ரித்திகா சிங்

    ரித்திகா சிங்

    அசோக் செல்வனின் நடிப்பு, இந்தப் படத்துக்குப் பிறகு பேசப்படும். அவர் பெரும் உயரங்களுக்குச் செல்வார். ரித்திகா சிங்கின் துடிப்பான நடிப்பு ரசிக்கப்படும் விதமாக இருக்கும். சாரா அற்புதமான கேரக்டரில் நடித்துள்ளார். அவரது காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு அவரது அடையாளத்தை மாற்றும் விதமாக இருக்கும் என்றார்.

    English summary
    Actress Vani Bhojan says, 'Oh My Kadavule is a film that will remain close to my heart forever'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X