ஓ மை கடவுளே படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்ளோ தெரியுமா? ஆரம்பமே அசத்தல்தான்!

சென்னை: ஓ மை கடவுளே திரைப்படம் நேற்று வெளியான நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் வசூலித்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் காதலர் தினமான நேற்று வெளியான படம் ஓ மை கடவுளே. இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.

Oh my Kadavule movie first day box office collection revealed

சின்னத்திரை நடிகையான வாணி போஜன் இந்தப் படத்தின் மூலம் பெரிய திரைக்கும் அறிமுகமாகியிருக்கிறார். ஓ மை கடவுளே படத்தை அறிமுக இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படம் வெளியான முதல் நாளிலேயே பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகம் முழுக்க நேற்று ஒரே நாளில் 1.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் மட்டும் முதல் நாளில் 22 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நான் சிரித்தால் மற்றும் ஓ மை கடவுளே படங்கள் மட்டுமே நேற்று ரிலீசான நிலையில் வார இறுதி நாட்களிலும் படம் நல்ல வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X