ஓ மைகடவுளே ஸ்னீக் பீக் வெளியானது.. 3 லட்சம் பார்வையாளர்களுடன் டிரெண்டிங் !
Recommended Video
சென்னை: ஓ மை கடவுளே படத்தில் அசோக்செல்வன் பேசும்வசனம் ஸ்னீக் பீக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது டிரெண்டாகி உள்ளது.
நடிகர் அசோக்செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து நாயகிகள் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நாயகிகளாக நடித்து இருக்கும் படம் தான் ஓ மை கடவுளே. இந்த படத்தை அறிமுக இயக்குனரான அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்தை ராட்சசன் பட தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு தயாரித்து உள்ளார். படத்திற்கு இசையமைத்துள்ளார் லியோன் ஜேம்ஸ் .

தற்போது காதலர் தினத்தில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் காட்சிகள் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது .
இதுதொடர்பான ஒரு ஸீநீக் பீக்கை படக்குழு வெளியிட்டுள்ளது . இதில் விஜய் சேதுபதியிடம் நடிகர் அசோக்செல்வன் தனது திருமண வாழ்கைக்கு பிறகு சந்தித்து வரும் கடினங்களை பற்றி புழம்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது .

குறிப்பாகஇந்த ஸ்னீக் பீக்கில் அசோக்செல்வன் பேசும் ஒரு வசனம் வருகிறது. மனைவிய கூட பிரண்டா பாத்துக்கலாம். ஆனா பிரண்ட மனைவியா பாக்கவே முடியாது என்பது தான். முன்னோட்டத்திலே ரசிகர்களால் அதிகம் பாராட்டபட்ட வசனம் இது .

ஓமை கடவுளே படத்தில் அசோக்செல்வன் தனது தோழியை விளையாட்டாக திருமணம் செய்ய போய் விபரீதத்தில் மாட்டி கொள்வார். அங்கிருந்து கதை பல சுவாரஸ்யமான சம்பவங்களுடன் நகர்ந்து செல்லும். இதற்கிடையே விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் வரும் காட்சிகளும் அவர்களின் வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது .
படம் நல்ல வெற்றியை பதிவு செய்ய காரணம் படத்தின் வசனங்களே. இன்றைய இளைஞர்களின் ரசனையை நூறு சதவீதம் புரிந்த ஒருவரால் தான் இப்படி வசனங்களை இயற்ற முடியும் .
தற்போது வெளியாகியுள்ள ஸ்னீக் பீக் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் டிரெண்டில் இருக்கிறது. படமும் நல்ல விமர்சனங்களை தொடர்ந்து சந்தித்து வருவதால், வரும் வாரங்களிலும் படம் நல்ல ரன்னிங்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
தமிழ்சினிமாவில் மற்றும் ஒரு காதல் கதை தான் என்றாலும் எடுக்கப்பட்ட விதம் சிறப்பாக அமைந்ததால் படம் நல்ல வெற்றியை பதிவு செய்திருக்கிறது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்தது படத்தின் மற்றொரு பலம்.


Click it and Unblock the Notifications











