twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓ மை கடவுளே தெலுங்கு ரீமேக் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    |

    சென்னை: அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான ஓ மை கடவுளே திரைப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்

    Recommended Video

    Oh Manapenne வந்தது இப்படி தான் | Harish Kalyan | Priya Bhavani Shankar

    விஜய் சேதுபதி,ரமேஷ் திலக் சிறப்பு தோற்றத்தில் கடவுளாக நடித்த இந்த திரைப்படம் தமிழில் சக்கைப்போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

    காதில் பூ வைத்த க்யூட் புகைப்படத்தை பதிவிட்ட சமந்தா .. மார்டன் சகுந்தலம் என வர்ணிக்கும் ரசிகர்கள்!காதில் பூ வைத்த க்யூட் புகைப்படத்தை பதிவிட்ட சமந்தா .. மார்டன் சகுந்தலம் என வர்ணிக்கும் ரசிகர்கள்!

    தமிழில் வெற்றி பெற்ற கையோடு தெலுங்கு ரீமேக் பணிகளும் தடபுடலாக நடைபெற்று வர இப்பொழுது ஓ மை கடவுளே தெலுங்கு ரீமேக்கின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    நேர்த்தியான காதல் படமாக

    நேர்த்தியான காதல் படமாக

    தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதுப்புது இயக்குனர்கள் வித்தியாசமான கதைகளில் களமிறங்கி வெற்றியும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஓ மை கடவுளே என்று சூப்பரான காதல் கதையை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து. முதல் திரைப்படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாத அளவிற்கு மிக நேர்த்தியான காதல் படமாக இப்படத்தை இயக்கியிருந்தார்.

    சாதாரணமான காதல் கதையை

    சாதாரணமான காதல் கதையை

    சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகும் ஆண் பெண் பின் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறி கரம் பிடிக்கும் என்று மிக சாதாரணமான கதையை தற்போதுள்ள தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் வித்தியாசமான ஸ்டைலில் இயக்கி இருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அசோக் செல்வன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்க ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர்.

    விஜய் சேதுபதி கடவுளாக

    விஜய் சேதுபதி கடவுளாக

    ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது மேலும் கவனத்தை பெற்றது. விஜய் சேதுபதி இதில் கடவுளாக நடித்திருப்பார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் குறைந்த அளவு நடிகர் நடிகைகளைக் கொண்டு உருவான ஓ மை கடவுளே மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.

    தெலுங்கில் ரீமேக்

    தெலுங்கில் ரீமேக்

    தமிழில் வெற்றி பெற்ற கையோடு இந்த திரைப்படம் தெலுங்கிலும் தற்போது தயாராகி வருகிறது. ஹிட் படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் விஷ்வக் சென் ஓ மை கடவுளே தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடிக்க மிதிலா பல்கர் கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

    டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

    டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

    தமிழில் இயக்கிய அஷ்வத் மாரிமுத்து தெலுங்கிலும் இந்த படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் சூழலில் படக்குழு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமாக காதலர்களை மிகவும் கவர்கின்ற வகையில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு "ஒரி தேவுடா" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    Oh My Kadavule Telugu Remake Title and First Look Out
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X