ரித்திகா சிங்கின் காதலர் தின பரிசு .. “ஓ மை கடவுளே“.. பிப்ரவரி 14ல் ரிலீஸ் !
Recommended Video
சென்னை : "ஓ மை கடவுளே" திரைப்படம் பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.
முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகை தான் ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தனது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடித்துள்ள திரைப்படம் தான் "ஓ மை கடவுளே"இந்த படம் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.

படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது..
"ஓ மை கடவுளே" என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்க வாய்ப்பாக தோன்றியது.
இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக உள்ளது. படம் முழுக்க நீங்கள் புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள். அசோக் செல்வன் மிகத்திறமை வாய்ந்த நடிகர் இப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும்.

வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரை சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகை தவழும். நேர்மறை தன்மை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார். "ஓ மை கடவுளே" வெறும் ரொமன்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம் நீங்காது நிற்கும் என்றார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு ஹோப்பி ஹேய் பிக்சர்ஸ் அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து "ஓ மை கடவுளே" படத்தை எழுதி இயக்கியுள்ளார். அசோக்செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











