தமிழில் சூப்பர் ஹிட்..அப்படியே தெலுங்குக்கு போகிறது அசோக் செல்வனின் ஓ மை கடவுளே.. அங்க யாரு கடவுள்?
சென்னை: தமிழில் ஹிட்டான, ஓ மை கடவுளே படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது.
Recommended Video
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவான படம், ஓ மை கடவுளே. வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷாரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தை அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிச்கர்ஸ் அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதி
இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி படத்தை தமிழகத்தில் வெளியிட்டது. படத்துக்கு விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். லியான் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி கடவுளாக நடித்துள்ளார். அவர் உதவியாளராக ரமேஷ் திலக் நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

வாணி போஜன்
இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார் வாணி போஜன். அவர் கூறும்போது, ' இது என் இதயத்துக்கு நெருக்கமான படம். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு கவனமாக, தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறேன். தமிழில் அற்புதமான வாய்ப்பாக, இந்தப் படம் அமைந்திருக்கிறது. அஷ்வத் சிறப்பாக இயக்கியுள்ளார் என்று கூறியிருந்தார்.

5 வருடமாக
இந்நிலையில் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுபற்றி இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவிடம் கேட்டபோது, 'இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தெரியும். இதன் ஸ்கிரிப்டை 5 வருடமாக செதுக்கி செதுக்கி உருவாக்கினேன். படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியொரு வரவேற்பை பெறும் என்று நினைக்கவில்லை' என்று கூறியிருந்தார்.

விரைவில் அறிவிக்கிறேன்
இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. இதை தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அசோக் செல்வன், தெலுங்கிலும் அறிமுகமான நடிகர் என்பதால், அவரே அங்கும் நடிக்கிறாரா, வேறு ஹீரோ நடிக்கிறார்களா என்பது தெரியவில்லை. இதுபற்றி அஸ்வத்திடம் கேட்டபோது, படத்தை தெலுங்கில் இயக்கப் போவது உண்மைதான். யார் நடிக்க போகிறார்கள் என்ற விவரத்தை விரைவில் அறிவிக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











