அந்த கடவுள் விஜய்சேதுபதி தானா? ஓ மை கடவுளே டிரைலர் ரிலீஸ்.. காதலர் தினத்துக்கு செம்ம ட்ரீட் இருக்கு!

சென்னை: அஷ்வத் மாரி முத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரி முத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா மற்றும் ஸ்பெஷல் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ஓ மை கடவுளே.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

அசோக் செல்வன், விஜய்சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

டிரைலரை வெளியிட்ட சூர்யா

அஷ்வத் மாரி முத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள ஓ மை கடவுளே படத்தின் டிரைலரை தற்போது நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஓ மை கடவுளே டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

யார் கடவுள்

யார் கடவுள்

ஓ மை கடவுளே என்ற டைட்டில் சாதாரணமாக வைக்கவில்லை என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. அசோக் செல்வன், ரித்திகா சிங் இடையே நடக்கும் காதல் போராட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் கடவுளாக நடிகர் விஜய் சேதுபதி ஸ்பெஷல் ரோலில் நடித்துள்ளார். அவர் கொடுக்கும் மேஜிக் டிக்கெட் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் என தெரிகிறது.

சொன்னா புரியாது

டிரைலரில் நாயகன் அசோக் செல்வன் "உங்களுக்கு சொன்னா புரியாது" என்ற வசனத்தை ஓயாமல் சொல்லி வருகிறார். அப்படி அது என்ன விஷயம் என்பதை படத்தை பார்த்துத் தான் ரசிகர்கள் தெரிஞ்சுக்கணும். தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காமெடி படங்கள் அதிகமாக வெளி வருவது கிடையாது. அதிலும் ஃபேண்டஸி கலந்து அட்டகாசமாக இந்த படத்தை எடுத்துள்ளனர்.

சின்னத்திரை நயன்தாரா

சின்னத்திரை நயன்தாரா

தெய்வமகள் உள்ளிட்ட டிவி தொடர்களில் நடித்து தமிழக ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டுள்ள வாணி போஜனை சின்னத்திரை நயன்தாரா என பலரும் செல்லமாக அழைப்பார்கள். சின்னத்திரையில் இருந்து பிரியா பவானி சங்கர் வெள்ளித் திரைக்கு வந்ததை தொடர்ந்து, நடிகை வாணி போஜன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X