Oho Enthan Baby: விஷ்ணு விஷால் தம்பி ஹீரோவாக அறிமுகம்.. ஓஹோ எந்தன் பேபி ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: ஃபைவ் ஸ்டார், திருடா திருடி, திருமலை, சரவணா என பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார் சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இயக்கத்தில் ஆர்வம் செலுத்தி வந்த நிலையில், அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ஓஹோ எந்தன் பேபி. நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவருடைய தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வந்த நடிகை மிதிலா பால்கர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள ஓஹோ எந்தன் பேபி படத்தின் ப்ரீமியர் நேற்று இரவு வெளியான நிலையில், ஏகப்பட்ட பிரபலங்கள் அந்த படத்தை பார்த்து விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் 2009ம் ஆண்டு ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷ்ணு விஷால் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தனது தம்பியையே ஹீரோவாக்கியுள்ளார். மேலும், அவரும் படத்தில் கேமியோ ரோலில் நடித்து தம்பியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், இந்த படம் குறித்த ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
முதல் விமர்சனம் கொடுத்த அமீர்கான்: விஷ்ணு விஷாலும் அமீர்கானும் நெருங்கிய உறவினர்களாகவே மாறிவிட்டனர். விஷ்ணு விஷாலின் மகளுக்கு சமீபத்தில் மிரா எனும் பெயரை அமீர்கான் சூட்டினார். அமீர்கானின் மகள் பெயர் இரா என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ருத்ராவின் அறிமுக படமான ஓஹோ எந்தன் பேபி படத்தின் பிரத்யேக ஷோவை பார்த்துவிட்டு படம் ரொம்பவே சூப்பராக இருக்கிறது என முதல் விமர்சனத்தையும் கொடுத்திருந்தார்.
ருத்ரா நடிப்பு எப்படி?: ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா அறிமுகமாகியுள்ள படத்துக்கு 5க்கு 3.5 மார்க் கொடுத்திருக்கிறார். ருத்ராவின் நடிப்பு சிறப்பாக உள்ளது என்றும் எமோஷனல் காட்சிகளிலும் நடிப்பால் கவர்கிறார் என்றும் கூறியுள்ளார். மிதிலா பால்கர் வழக்கம் போல தனது மெச்சூரான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் மிஸ்கின் அவர்களாகவே திரையில் வரும் காட்சிகள் எல்லாம் காமெடி ரகளை என்றும் காதல் மற்றும் கான்ஃப்ளிக்ட் கலந்த கலவை தான் இந்த படம் என விமர்சித்துள்ளார்.
ரொமான்டிக் என்டர்டெயினர்: தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில், யூத்ஃபுல் ரொமான்டிக் என் டர்டெயினராக இந்த படம் உள்ளது. ருத்ரா ஹீரோவாக சாலிட் டெப்யூட் கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜென் மார்டினின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். கண்டிப்பாக தியேட்டர்களுக்குச் சென்று பார்க்கலாம் என பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.
பிரசாந்த் ரங்கசாமி விமர்சனம்: இட்டிஸ் பிரசாந்த் என அழைக்கப்படும் பிரசாந்த் ரங்கசாமி ஹானஸ்ட்டாக சொல்ல வேண்டும் என்றால் படம் இந்தளவுக்கு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. இடைவேளை காட்சி இளைஞர்களை ரொம்பவே கனெக்ட் செய்யும் என்றும் இரண்டாம் பாதி சூப்பராக உள்ளது என்றும் ருத்ராவுக்கு நல்ல அறிமுகம் என பாராட்டியுள்ளார். ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோ ட்விட்டர் விமர்சனங்கள் அதிகபட்சமாக பாசிட்டிவாக வந்துள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் இந்த படத்தை எந்தளவுக்கு கொண்டாடுகின்றனர் என்பது தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











