twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புனே திரைப்பட கல்லூரியின் முதல் மாணவி.. பழம்பெரும் நடிகை ஜமீலா மாலிக் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

    |

    சென்னை பழம்பெரும் நடிகையான ஜமீலா மாலிக் காலமானார். அவருக்கு வயது 73.

    கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஜமீலா மாலிக். இவர் 1946ஆம் ஆண்டு பிறந்தார். அவரது பெற்றோர் அப்போதே காங்கிரஸ் கட்சியில் இருந்தனர்.

    ஜமீலா மாலிக் 1970 மற்றும் 80களில் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 1972ஆம் ஆண்டு வெளியான ஆத்யாதே கதா என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

    Old Actress Jamila Malik is no more

    ஜமீலா மாலிக் கேரளாவில் இருந்து புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் பயின்ற முதல் பெண் மாணவர் என்ற பெருமைக்குரியவர். மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் ஜமீலா. வெள்ளி ரதம், அதிசய ராகம், லக்ஷ்மி, நதியை தேடி வந்த கடல், பொன்னழகி, ஸ்ரீமன் ஸ்ரீமதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி 1990 களில் ஏராளமான மலையாள மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகை ஜமீலா மாலிக். சினிமா சீரியல்கள் மட்டுமின்றி ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளார். திருமணம் செய்து கொண்ட ஜமீலாவுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜமீலா திருவனந்தப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.இந்நிலையில் ஜமீலா மாலிக் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Read more about: passes away
    English summary
    Old Actress Jamila Malik is no more. She was the familiar actress in 1970s and 1980s.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X