ஆலுமா டோலுமாக்கு அப்புறம் செம சம்பவம்.. அஜித் பாட்டுக்கு கோட் சூட் போட்டு ஆடுறது யாருன்னு பாருங்க!

சென்னை: ராக் ஸ்டார் அனிருத் இசையில் விஜய் பாடல் வந்தாலும் சரி, ரஜினிகாந்த் பாடல் வந்தாலும் சரி, அஜித் குமாருக்கு பாடல் வந்தாலும் சரி சிறுசுகள் முதல் பெருசுகள் வரை ஆட்டம் போட்டு ரீல்ஸ்களை சோஷியல் மீடியா முழுக்க டிரெண்ட் செய்வது வாடிக்கையாக மாறிவிட்டது.

ஆலுமா டோலுமா பாடலுக்குப் பிறகு அஜித்தின் சவடீக்கா பாடல் தான் அப்படியொரு சாதனையை பட்டித் தொட்டியெங்கும் நடத்தி வருகிறது. சினிமா நடிகைகள் முதல் கிராமத்துப் பாட்டிகள் வரை தற்போது அந்த பாடலுக்கு வைப் செய்து ரீல்ஸ் போடும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

vidamuyarchi ajith kumar trisha

பொதுமக்களை கவரும் பாடல்கள் தான் சூப்பர் ஹிட்டாகும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதே போல அந்த படத்துக்கும் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஆட்டோமேட்டிக்காகவே எழுந்துவிடும். மகிழ் திருமேனியின் பேட்டிக்கு பின்னர், விடாமுயற்சி படத்தை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

vidamuyarchi ajith kumar trisha

ஆட்டம் போட வைத்த அனிருத்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்திலும் அதே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் உடல் எடை அதிகரித்த தோற்றத்திலேயே நடித்து வருகிறாரே என நினைத்த ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்தின் சவடீக்கா பாடல் செம சர்ப்ரைஸ் ஆக மாறியது. கார் ரேஸுக்காக ஸ்லிம்மான நடிகர் அஜித் அதே லுக்குடன் அந்த பாடலுக்கு ஆட்டம் போட பாடலையும் செம பெப்பியாகவும் பெண்களுக்கு பிடிக்கும்படியும் அனிருத் போட்டு ஹிட்டாக்கி விட்டார்.

vidamuyarchi ajith kumar trisha

கோட் சூட்டில் ஆடும் பாட்டி: கடந்த ஆண்டு மனசிலாயோ பாடல் அதிகளவில் ரீல்ஸ்களை அள்ளிய நிலையில், லேட்டஸ்ட்டாக சோஷியல் மீடியாவையும் பட்டித் தொட்டி ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்து வருகிறது. தோட்டத்தில் வேலை செய்யும் பாட்டி ஒருவர் கோட் சூட் அணிந்துக் கொண்டு நடனமாட அவருடன் மேலும், சில பாட்டிகளும் செம ஸ்டெப் போட்டு நடனமாடும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. அஜித்துக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் கூடியிருக்காங்க பாருங்க என்றும் விடாமுயற்சி படம் வசூலில் மிகப்பெரிய சம்பவத்தை செய்து இண்டஸ்ட்ரி ஹிட்டும் அடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஏகே ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டு கூறி வருகின்றனர்.

த்ரிஷாவுக்கு போட்டி: 3 பாட்டிகளும் சிரித்துக் கொண்டு அஜித் பாடலுக்கு நடனமாடியதை பார்த்த ரசிகர்கள் அந்த பாடலில் நடனமாடிய த்ரிஷாவே இவர்களது கள்ளம் கபடமற்ற புன்னகைக்கும் நடனத்துக்கும் முன்னாடி தோற்றுவிடுவார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X