பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்த அன்பு கேங்.. என்னவெல்லாம் நடக்கப்போகுதோ.. எகிற வைக்கும் ப்ரோமோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் அன்பு கேங்கை சேர்ந்த போட்டியாளர்கள் மீண்டும் நுழைந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல் ஃபினாலே வாரம் தொடங்குகிறது. ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேபி மற்றும் ரம்யா ஆகிய 6 பேர் ஃபைனலிஸ்ட்டாக உள்ளனர்.
இந்த வாரம் நாமினேஷன், டாஸ்க் என எதுவும் இல்லாமல் கொண்டாட்டமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய போட்டியாளர்கள்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்று எவிக்ட்டான சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

கேப்டன் யார்?
அதாவது நடிகை ரேகா, அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வந்துள்ளனர். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து இந்த வார கேப்டன் யார் என்பது குறித்து டிஸ்கஸ் செய்கிறார்கள்.

கிட்சனில் வேலை
அப்போது கண்களை கட்டியப்படி ஸ்டோர் ரூம் வழியாக 4 பேரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார்கள். குறிப்பாக அன்பு கேங்கை சேர்ந்த 3 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். அவர்களில், அர்ச்சனா வந்த வேகத்தில் கிட்சனில் வேலையை தொடங்குகிறார்.

கப்போர்டில் ஒளிந்த நிஷா
ரமேஷ் வழக்கம் போல் பெட்ரூமில் போய் படுத்துக்கொள்கிறார். மற்ற போட்டியாளர்களும் கேஷ்வலாக வீட்டுக்குள் இருக்கிறார்கள். நிஷா கிட்சன் கப்போர்டில் ஒளிந்து கொள்கிறார். இந்நிலையில் வீட்டுக்குள் யாரோ இருப்பதை அறிந்த ரம்யா மற்ற ஹவுஸ்மேட்ஸை அழைத்து காட்டுகிறார்.

கட்டியணைத்து ஃபீலிங்ஸ்
அப்போது கிட்சனில் இருப்பது அர்ச்சனா என்பதை அறிந்த ஹவுஸ்மேட்ஸ் உள்ளே சென்று அவர்களை பார்த்து கட்டியணைத்து ஃபீலிங்ஸை காட்டுகின்றனர். ரியோ அர்ச்சனாவை ரொம்ப மிஸ் பண்ணியதாக கூறுகிறார்.

நிஷா மட்டும் ஆரியை..
அர்ச்சனா, ரம்யா ரியோ ஆகியோரை கட்டிப்பிடிக்கிறார். சோம் ரமேஷை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். இதேபோல் பாலாஜி, ரேகா மற்றும் ரமேஷை கட்டியணைக்கிறார். நிஷா மட்டும் ஆரியை கட்டியணைக்கிறார். பிக்பாஸ் வீடே ஃபினாலே களைக்கட்டியுள்ளது.

ஆரி பெயரை டேமேஜ் பண்ணாமல்..
இதனை பார்த்த ரசிகர்கள் அன்பு கேங் ரீ என்ட்ரி ஆகியுள்ளது. ஆரியை என்ன பாடுபடுத்தப் போகிறார்களோ என்று கூறி வருகின்றனர். ஆரி பெயரை டேமேஜ் பண்ணாமல் வந்தோமா போனோமா என்று இருந்தால் சரிதான் என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











