அஜீத்தை பத்தி பேசினா சோடா பாட்டில் பறக்கும்: கொந்தளிக்கும் பாட்டி- வைரல் வீடியோ
Recommended Video

சென்னை:யாராவது அஜீத்தை பற்றி தவறாக பேசினால் சோடா பாட்டில் பறக்கும் என்று மூதாட்டி ஒருவர் கூறியபோது எடுத்த வடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
அஜீத்திற்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜென்டில்மேன் என்று பெயர் எடுத்துள்ள அஜீத்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் துப்புரவு தொழிலாளியான மூதாட்டி ஒருவர் அஜீத்தை பற்றி பேசும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
சோடா பாட்டில்
அஜீத் தர்மதானம், அன்னதானம், குழந்தைகளுக்கு உதவி செய்வதுடன் 25 வயது இளைஞருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளார். யாராவது அவரை பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் என்று அந்த மூதாட்டி வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி
அஜீத் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் என்று பாட்டி கூறியதை கேட்டு தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
பிடிக்கும்
6 வயது முதல் 60 வயது வரைக்கும் எங்க தலய தான் பிடிக்கும். தல ரசிகராக இருப்பதில் பெருமை அடைகிறோம்.
சந்தோஷம்
இது தான் எங்க தல 😎🔥 என ரசிகர் ஒருவர் பெருமையாக தெரிவித்துள்ளார். அஜீத் விளம்பரம் தேடாமல் பலருக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











