twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெர்சல், வேதாளம், பாட்ஷா.. இன்னும் பல படங்களைப் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    ரஜினிக்கு நண்பன் விஷாலுக்கு எதிரியான தியேட்டர் சங்க நிர்வாகிகள்- வீடியோ

    சென்னை : டிஜிட்டல் ஒளிபரப்புக்கான கியூப், யுஎஃப்ஓ கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா துறையினர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவை மீறி ஒரே ஒரு படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.

    புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் எல்லா தியேட்டர்களிலும் 'பாட்ஷா', 'மெர்சல்', 'வேதாளம்' பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    தியேட்டர்கள்

    தியேட்டர்கள்

    முன்பெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் புதிய படங்களைத் திரையிட தனி தியேட்டர்கள், கொஞ்சம் பழைய படங்களைத் திரையிட சில தியேட்டர்கள், அதற்கும் பழைய படங்களைத் திரையிட சில தியேட்டர்கள் என தனித் தனியாக இருக்கும்.

    பின்னோக்கித் திரும்பிய காலம்

    பின்னோக்கித் திரும்பிய காலம்

    இப்போது எல்லா ஊர்களிலும் பழைய படங்களை வெளியிடும் நிலை வந்துவிட்டது. கடந்த ஆண்டில் வெளிவந்து சிலபல காரணங்களால் ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போன படங்கள், நன்றாக ஓடிய படங்கள் என சில படங்களை மீண்டும் இன்று திரையிட்டுள்ளார்கள்.

    புதிய படங்கள் நோ ரிலீஸ்

    புதிய படங்கள் நோ ரிலீஸ்

    புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளதால் வேறு வழியின்றி பழைய படங்களை வெளியிட்டுள்ளனர். 'மெர்சல்', 'மேயாத மான்', 'கருப்பன்', 'தரமணி', 'விக்ரம் வேதா', 'சிவலிங்கா', 'தெறி', 'வேதாளம்', 'பாகுபலி', 'யாமிருக்க பயமே' ஆகிய படங்கள் புதிய படங்களின் ரிலீஸால் சீக்கிரமே தூக்கப்பட்டதால் தற்போது மீண்டும் வெளியாகி இருக்கின்றன.

    கிளாசிக் படங்கள்

    கிளாசிக் படங்கள்

    ரஜினியின் மெஹாஹிட் படமான 'பாட்ஷா', எம்.ஜி.ஆரின் 'நினைத்ததை முடிப்பவன்' ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன. இந்த கிளாசிக் படங்களுக்கும் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பு இருந்து வருகிறது.

    QUBE கட்டணம்

    QUBE கட்டணம்

    பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வதற்கு க்யூப் கட்டணம் குறைவு என்பதும் இப்போதைய மறு வெளியீட்டுக்குக் காரணம். நீங்கள் மிஸ் செய்திருந்த படங்கள் எதுவும் தற்போது திரையிடப்பட்டால் அவற்றைப் பார்க்க இது நல்ல சான்ஸ்.

    அடுத்த வாரம்

    அடுத்த வாரம்

    அடுத்த வாரம் முதல் தியேட்டர்காரர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதால் தியேட்டர்கள் மூடப்பட இருக்கின்றன. தொடர்ந்து புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் வாராவாரம் தியேட்டர் சென்று படம் பார்க்கும் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள்.

    English summary
    From March 1, new films have not been released since due to producers council strike. So, all the theaters are re-releasing old films including 'Baadsha, Mersal, Vedhalam'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X