நல்ல மருமகன்… தனுஷை பாராட்டிய ரஜினி... இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ !
சென்னை : தனுஷ் நல்ல தந்தை, நல்ல மருமகன், மனைவியை நன்றாக கவனித்துக் கொள்கிறார் என ரஜினிகாந்த் கூறிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Recommended Video
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ரஜினிகாந்தின் மனதில் இடம் பிடித்த தனுஷால் மனைவியின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போனது வேதனையாக இருப்பதாக கூறி கவலையுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தனுஷ்,ஐஸ்வர்யா பிரிவு
சினிமாவில் முன்னணி நடிகராக வளரத் தொடங்கிய காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004ல் திருமணம் செய்து கொண்டார் தனுஷ். 18 ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்து வந்த நிலையில், மண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக இருவரும் தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

சோகத்தில் ரசிகர்கள்
தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும்படி இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர். தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரின் பிரிவு அறிவிப்பு அவர்களது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

டிராண்டாகும் வீடியோ
இந்நிலையில், தனுஷை ரஜினிகாந்த் பாராட்டிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காலாவின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், தனுஷைப் புகழ்ந்து பாராட்டி பேசியுள்ளார். அதில், தனுஷ் நல்ல தந்தை மற்றும் நல்ல கணவர் என்றார்.

நல்ல மருமகன்
தனுஷ் அருமையான பையன், அவர் தனது பெற்றோரை மதிக்கிறார், அவர்களை கடவுளாக கருதுகிறார். மனைவியைக் கவனித்துக் கொள்கிறார். அவர் ஒரு நல்ல தந்தை, நல்ல மருமகன், நல்ல மனிதர், நல்ல திறமைசாலி என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் தனுஷை புகழ்ந்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.


Click it and Unblock the Notifications











