அரைத்த மாவை புதுசா அரைத்து இருக்கிறாரா ஜீத்து ஜோசப்.. தம்பி டிரைலர் எப்படி இருக்கு?

சென்னை: கார்த்தி, ஜோதிகா, சத்தியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள தம்பி படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள தம்பி படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது.

இது சீரியஸ் இல்லை காமெடி படம்

இது சீரியஸ் இல்லை காமெடி படம்

தம்பி படத்தின் டீஸர் வெளியான போது, படம் ரொம்ப சீரியஸ் படமாக உருவாகியுள்ள தோற்றத்தை அளித்தது. ஆனால், தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் படம் பக்கா காமெடி படமாக உருவாகியுள்ளது என்றார். தற்போது டிரைலரை பார்க்கும் போது அந்த எஃபெக்ட் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.

போட்டி கன்ஃபார்ம்

போட்டி கன்ஃபார்ம்

தம்பி படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிவகார்த்திகேயனின் ஹீரோ மற்றும் ஜீவாவின் சீறு படங்களுடன் தம்பி படம் மோதுவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகவுள்ள இந்த மூன்று படங்களில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கைதி அலை

கைதி அலை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான கைதி படம் மெகா பிளாக்பஸ்டர் படமாக மாறிய நிலையில், தம்பி படத்தின் ரிலீசுக்கு கைதி படத்தின் அலை பெரிதும் உதவி செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். கைதி படத்தைத் தொடர்ந்து வெளியாகவுள்ள கார்த்தி படம் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

டிரைலர் எப்படி இருக்கு?

15 வருஷத்துக்கு முன்னாடி வீட்டை விட்டு போன சரவணன் பேரில் நடிகர் கார்த்தி சத்யராஜ், ஜோதிகா இருக்கும் வீட்டுக்கு வந்து செய்யும் ரகளைகளாகவும், அவர் உண்மையான தம்பியா அல்லது, பழைய படங்களில் வரும் ஆள் மாறாட்ட கேஸா என்னும் சந்தேகம் டிரைலரை பார்க்கும் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. வீட்டை விட்டு காணாமல் போன பிள்ளைக்கு பதிலாக வேறு ஒருவர் அந்த வீட்டுக்கு வந்து அங்குள்ளவர்களின் பிரச்சனைகளை போக்கும் பல படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், ஜீத்து ஜோசப் தனது மேஜிக்கை எப்படி செய்யப்போகிறார் என்பது படம் ரிலீசானதும் தெரிந்துவிடும்.

வழக்கம்போல சூர்யா

தம்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் அண்ணன் சூர்யாவின் தலைமையில் அரங்கேறியது. தற்போது தம்பி படத்தின் டிரைலரையும் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், திரையில் கார்த்தி மற்றும் ஜோவின் நடிப்பை காண ஆவலுடன் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X