twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழைய சரக்குப்பா...ஜகமே தந்திரத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

    |

    சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ஜகமே தந்திரம். இந்த படம் சமீபத்தில் நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் செய்யப்பட்டது. விதவிதமாக மீம்ஸ் போட்டு இந்த படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    சர்வானந்த் 30-வது திரைப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது சர்வானந்த் 30-வது திரைப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது

    தனது பழைய பிளாக்பஸ்டர் படத்தில் லேசாக சில மாற்றங்கள் செய்து, கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருப்பதாகவும் கூறி வருகின்றனர். ஜகமே தந்திரம் படத்தை ஜிகர்தண்டா படத்துடன் ஒப்பிட்டு தான் இப்படி கிண்டல் செய்து வருகின்றனர்.

    வித்தியாசமாக ட்ரை பண்ணிருக்கார்

    வித்தியாசமாக ட்ரை பண்ணிருக்கார்

    வழக்கமாக கார்த்திக் சுப்பராஜ் படங்கள் ஒரு கேங்ஸ்டரை மையமாக வைத்ததாக தான் இருக்கும். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இனவெறி அரசியல் ஆகியவற்றை சுற்றி இந்த படத்தின் கதையை அமைத்துள்ளார்.

    அதே பழைய கதை

    அதே பழைய கதை

    இருந்தாலும் ஜகமே தந்திரம் - ஜிகர்தண்டா படங்களுக்கு இடையேயான ஒற்றுமை ட்ரோல் செய்து வருகின்றனர். 2014 ல் ரிலீசான ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் ஒருவரை பின் தொடர்ந்து உளவு பார்க்கும் ஹீரோ, கடைசியில் அவரை காட்டிக் கொடுப்பது ஒரு கோணம்.

    ஜிகர்தண்டாவின் காப்பி

    ஜிகர்தண்டாவின் காப்பி

    மற்றொரு விதமாக பார்த்தால், ஹீரோ - கேங்ஸ்டர் இடையேயான ஒப்பந்தம், கேங்ஸ்டரிடம் ஹீரோ மாட்டிக் கொள்ளும் போது அவருக்கு உதவும் நண்பன். இது போன்ற பல ஒற்றுமைகளால் ஜகமே தந்திரம் படம், ஜிகர்தண்டாவின் காப்பி என கூறி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

    இரு படங்களின் கதை

    இரு படங்களின் கதை

    ஒரு பெரிய கேங்ஸ்டர், அவனை உளவு பார்க்க வரும் ஹீரோ, அவனுக்கு உதவுற ஒரு ஃபிரண்ட். இருவரும் தெருத் தெருவாக சுத்தியும் ஒரு தகவலும் கிடைக்கல. கடைசில கேங்ஸ்டர் கேங்ல ஒருவனை பிடிச்சு, ஃபிரண்ட்லியாக பழகி, அவனை பற்றிய ரகசியங்களை பெறுகின்றனர்.

    பழைய சரக்குப்பா இது

    பழைய சரக்குப்பா இது

    ஒரு கட்டத்துல கேங்ஸ்டர் கிட்ட ஹீரோ மாட்டிக்கிறார். அவரிடம் இருந்து தப்பி அவர் சொல்வதை செய்வதாக ஒப்புக் கொள்கிறார் ஹீரோ. கடைசியில் கேங்ஸ்டரை ஏமாற்றி, தப்பிக்கிறார் ஹீரோ. இது தான் இரண்டு படங்களின் கதை. மொத்தத்தில் ஜகமே தந்திரம், புதிய பாட்டிலில் ஊற்றப்பட்ட பழைய சரக்கு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Many memes have surfaced the internet comparing the recently released Jagame Thandiram with the movie Jigarthanda.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X