ஆத்தீ... இந்த பாட்டி கூட அஜித் ரசிகையா..? - அஜித்தை தப்பா பேசுனா சோடா பாட்டில் பறக்குமாமே!
Recommended Video

சென்னை : தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் படங்கள் வெளியாகும்போது மிகப்பெரிய ஓபனிங் இருக்கும். அஜித்தின் ஸ்டைலுக்காகவே பலர் அவரது ரசிகர்களாக இருப்பார்கள்.
அஜித்துக்கு பெரும்பாலும் இளைஞர்கள் தான் ரசிகர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் தற்போது வயதான பெண்மணி ஒருவர் நடிகர் அஜித்துக்கு ஆதரவாகப் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் வயதான பெண்மணி, அஜித் அன்னதானம், ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் எனப் பல உதவிகள் செய்கிறார். மேலும் கொட்டிவாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததாகவும் கூறியுள்ளார்.
அஜித்தை பற்றி தவறாகப் பேசினால் சோடா பாட்டில் பறக்கும் என்றும் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் அந்தப் பெண்மணி சென்னை வட்டார மொழியில் கோபமாக பேசிவிட்டுச் செல்லும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். ரசிகர் மன்றங்களைக் கலைத்த அஜித், பலருக்கும் இதுபோல் உதவி செய்வதாக அவ்வப்போது செய்திகள் வருமென்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











