ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி!

Recommended Video

Alia Bhatt: ஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு கெஞ்சிய வாரிசு நடிகை- வீடியோ

ஐதராபாத்: பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர்.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார்.

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக வெளிநாட்டு நாயாகியான டெய்சி எட்கர் ஜோன்ஸ் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணத்திற்காக அவர் படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில், தற்போது, ஜூனியர் என்.டி.ஆருக்கு மற்றொரு இங்கிலாந்து நடிகை ஜோடியாக கிடைத்துள்ளார். அந்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

என்ன கதை?

என்ன கதை?

இந்தியா முழுவதும் தற்போது சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த படங்கள் தான் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ராஜமெளலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படமும் ஒரு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த படம் தான்.

அல்லூரி சீத்தாராம ராஜு மற்றும் கொமரம் பீம் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர தாகத்துடன் எப்படி போரிட்டார்கள் என்பது தான் படத்தின் கதை.

தோர் நடிகர்

ராஜமெளலி படம் என்பதால், பிரம்மாண்டத்திற்கு குறைவு இருக்காது. ஆங்கிலேயர்களாக நடிக்க, பிரபல ஹாலிவுட் நடிகர்களை இறக்குமதி செய்துள்ளார் ராஜமெளலி. தோர், ரோம், ரெலிக் போன்ற பிரபல ஹாலிவுட் படத்தில் நடித்த ரே ஸ்டீவன்ஸன் ஆர்.ஆர்.ஆர். படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜேம்ஸ் பாண்டின் வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ் படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை ஆலிசன் டூடியும் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

யார் ஜோடி?

இங்கிலாந்து நடிகையான டெய்சி எட்கர் ஜோன்ஸ் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது, லண்டன் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஒலிவியா மோரிஸை ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இறக்குமதி செய்துள்ளார் ராஜமெளலி. மேலும், ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜெனிஃபர் எனும் இங்கிலாந்து பெண் கதாபாத்திரத்தில் ஒலிவியா மோரிஸ் நடிக்கவுள்ளார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.

டிரோல்

ஒலிவியா மோரிஸ் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடி என்ற அறிவிப்பு இந்திய அளவில் டிரெண்டாகி வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் ஹேட்டர்ஸ் இதுகுறித்து ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளனர். ஒலிவியா மிகவும் உயரமானவர் என்றும், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஸ்டூல் போட வேண்டும் எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X