அடிக்கிறார், துன்புறுத்துகிறார்.. ஓம்பூரி மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
மும்பை: பழம்பெரும் நடிகர் ஓம்பூரியின் மனைவி நந்திதா பூரி, தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
ஓம்பூரி மீதான இந்தப் புகார் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் நந்திதா இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளாராம்.

வீட்டு வன்முறை
கணவர் ஓம்பூரி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அடிப்பதாகவும் தனது புகாரில் நந்திதா கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

20 வருட தாம்பத்யம்
ஓம்பூரியும், நந்திதாவும் 20 வருடமாக குடும்பம் நடத்தி வரும் நிலையில் இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2வது மனைவி
நந்திதா, ஓம்பூரியின் 2வது மனைவி ஆவார். அதற்கு முன்பு சீமா கபூரை மணந்திருந்தார் ஓம்பூரி.

நந்திதாவின் புத்தகம் காரணமா...?
நந்திதா சமீபத்தில் 'Unlikely Hero: The Story Of Om Puri' என்ற பெயரில் ஓம்பூரி குறித்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தில் ஓம்பூரியின் அனுபவங்களை விவரித்திருந்தார். ஆனால் இந்த எழுத்தை ஓம்பூரி ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்படுவாரா?
மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஓம்பூரி கைது செய்யப்படுவாரா அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











