தயாரிப்பாளரால் தான் ப்ரியா வாரியரை ஹீரோயின் ஆக்கினேன்: குமுறும் இயக்குநர்
திருவனந்தபுரம்: தயாரிப்பாளர் கட்டாயப்படுத்தியதால் தான் ப்ரியா வாரியரை ஹீரோயினாக்கியதாக ஒரு அடார் லப் பட இயக்குநர் உமர் லுலு தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தன்று ரிலீஸான ப்ரியா பிரகாஷ் வாரியரின் ஒரு அடார் லவ் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. படத்தை பார்த்தவர்கள் ப்ரியா பிரகாஷ் வாரியரை கடுமையாக விமர்சித்தார்கள்.
இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் உமர் லுலு மலையாளம் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

ப்ரியா
மாணிக்ய மலராய பூவி பாடல் பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் ஓசிபச்சன் வாலக்குழி படம் சிறப்பாக வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து படத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு பிரிவுகளின் தயாரிப்பாளர்கள் ப்ரியா பிரகாஷ் வாரியரை ஹீரோயினாக்குமாறு கூறினார்கள்.

தயாரிப்பாளர்கள்
நான் படத்தை துவங்கியபோது ப்ரியா ஹீரோயின் கிடையாது. முன்னதாக படத்தின் கதையே வித்தியாசமாக இருந்தது. ஒரு இளம் ஜோடி கொலை செய்யப்படுவது தான் கதை. ஆனால் அது ஒர்க்அவுட் ஆகாததால் ப்ரியாவை முன்னிலைப்படுத்தி படத்தை வேறு விதமாக எடுக்குமாறு தயாரிப்பாளர்கள் வலியுறுத்தினார்கள்.

பிரச்சனை
படத்தின் டப்பிங் உரிமை தொடர்பாக தயாரிப்பாளர் எனக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் எனக்கும், அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. ப்ரியா பிரகாஷ் வாரியரை விட நூரின் ஷெரீப் தான் சிறந்த நடிகை. நான் ப்ரியாவுடன் டச்சில் இல்லை என்று லுலு தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்
கண்ணடித்து ஒரே நாளில் பிரபலமானவர் ப்ரியா. அவர் அப்படி பிரபலமானதை பார்த்து தான் அவரை ஹீரோயினாக போடுமாறு தயாரிப்பாளர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் படத்தை பார்த்தவர்களுக்கு ப்ரியாவை பிடிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











