லீக்கான பேட்ட ட்ரெய்லர்: படக்குழு அதிர்ச்சி #Pettatrailer
Recommended Video

சென்னை: பேட்ட படத்தின் ட்ரெய்லர் லீக்காகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

ட்ரெய்லரை பார்க்க தயாராகுங்கள் என்று சன் பிக்சர்ஸும், கார்த்திக் சுப்புராஜும் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பேட்ட படத்தின் ட்ரெய்லர் லீக்காகியுள்ளது.
11 நொடிகள் ஓடும் ட்ரெய்லரில் ரஜினி பன்ச் வசனம் பேசுகிறார். அந்த வசனத்தை தற்போதே தெரிவித்து சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை. லீக்கான ட்ரெய்லரை பலரும் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்து வருகின்றனர்.
ட்ரெய்லரை பார்க்க ஆவலாக இருந்த ரஜினி ரசிகர்கள் இந்த சம்பவத்தால் கவலை அடைந்துள்ளனர். ட்ரெய்லர் லீக்கால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











