கலி முத்திடுத்து... சாந்தி செஞ்ச வேலையைப் பாருங்க!
மும்பை: நடிப்பு என்ற பெயரில் இந்த கலைஞர்கள் செய்யும் சில வேலைகள் பல நேரங்களில் கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு... இப்படித்தான் பாலிவுட்டுக்கு வந்துள்ள புதிய கவர்ச்சி நடிகை சாந்தி டைனமைட்.. தான் அறிமுகமாகும் சவீதா பார்பி என்ற கவர்ச்சிப் படத்திற்காக தனது மார்பில் துளை போட்டு அதில் சின்ன வளையத்தை மாட்டியுள்ளார்.
பாலிவுட்டில் கால் எடுத்து வைத்துள்ள புதிய கவர்ச்சி கரகம்தான் இந்த சாந்தி டைனமைட்.. சாந்தி என்பது அவருக்கு அவரது அப்பா அம்மா வைத்த பெயர்.. ஆனால் டைனமைட் என்பது யார் வைத்த பெயரோ? ..(பளார்.. பளார்.. பளார்!)
இந்த சாந்தி டைனமைட்தான் இதுவரை பாலிவுட்டில் எந்த ஒரு கவர்ச்சி நடிகையும் செய்யத் துணியாததை செய்துள்ளார். அதுதான் மார்பில் துளை போட்டு வளையம் மாட்டிய செயல்.

சவீதா பார்பி
சவீதா பார்பி என்ற புதிய கவர்ச்சிப் படத்தில் நடித்து அறிமுகமாகிறார் சாந்தி டைனமைட். அதில்தான் இந்தக் கூத்தாம்.

பாடி பியர்ஸிங்...
பாடி பியர்ஸிங் என்ற உடலில் துளையிட்டு வளையம் மாட்டுவது, தோடு மாட்டுவது, பொம்மை மாட்டி விளையாடுவது பல நாடுகளிலும் பேஷனாக உள்ளது. முன்பெல்லாம் நம்ம ஊர்ப் பெண்கள் காது குத்துவது, மூக்கு குத்துவதோடு நின்றார்கள். இப்போது தொப்புளில் வளையம் மாட்டுவது பேஷனாகி விட்டது நகர்ப்புறங்களில்.

சாந்தி ஒரு படி மேலே போய்
ஆனால் இந்த சாந்தியோ ஒரு படி மேலே போய்.. இல்லை இல்லை.. கீழே வந்து மார்பி்ல் துளை போட்டு வளையம் மாட்டியுள்ளார்.

எகிப்தில் குத்தினார்களாம்
எகிப்தில் 14ம் லூயி காலத்தில் இப்படி பெண்கள் மார்புகளில் துளை போட்டு வளையம் போடும் ஸ்டைல் இருந்ததாக காரணம் கூறுகிறார் சாந்தி. அப்போதெல்லாம் உயர் வர்க்கத்துப் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமாம். அந்த ஸ்டைலைத்தான் தான் இப்போது கடைப்பிடித்திருப்பதாக கூறுகிறார் சாந்தி.

ரிஹானா செய்திருக்கிறாரே
மேலும் விளக்கம் கேட்டால் ரிஹானா, கிறிஸ்டியானா அகுலியேரா, நிக்கோல் ரிச்சி, ஆம்பர் ரோஸ், ஜேனட் ஜாக்சன் ஆகியோர் கூட இப்படி மார்புகளில் துளை போட்டு வளையம் போட்டுள்ளனர். நான் புதிதல்ல என்று விளக்கமளிக்கிறார் சாந்தி.

ரொம்பக் கவர்ச்சிகரமானது
இதுகுறித்து மேலும் அவர் சொல்லும்போது, இந்த வகையான வளையம் மாட்டுதல் மிகவும் கவர்ச்சிகரமானத, செக்ஸியானது, பெண்மையின் அழகை எடுத்துக் காட்ட உதவும். பெண்களுக்கு செக்ஸ் அப்பீலை அதிகரிக்கவும் இது உதவும். எனக்கு இதில் மகிழ்ச்சியே என்றார்.


Click it and Unblock the Notifications











