twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2வது நாளே காற்று வாங்கும் தியேட்டர்கள்: இது என்னடா 2.0 படத்திற்கு வந்த சோதனை?

    By Siva
    |

    Recommended Video

    2வது நாளே காற்று வாங்கும் தியேட்டர்கள்- வீடியோ

    சென்னை: 2.0 படம் ஓடும் தியேட்டர்களில் பல இடங்களில் ஈயாடுகிறது.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் அசத்தலாக நடித்துள்ள 2.0 படம் நேற்று ரிலீஸானது. 2.0 படத்தை பார்த்துவிட்டு வியக்காதவர்களே இல்லை.

    அதற்குள் 2.0 மவுசு அடங்கிவிட்டதா என்ற கேள்வி எழும் வகையில் உள்ளது தியேட்டர்களின் நிலை.

    டிக்கெட்

    டிக்கெட்

    2.0 ரிலீஸான நேற்றே பல தியேட்டர்களில் சீட்டுகள் காலியாக இருந்தது. ஷங்கர் படம் அதுவும் ரஜினி படத்திற்கு இந்த நிலையா என்று வியக்க வைத்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று 2.0 டிக்கெட் தாராளமாக கிடைக்கிறது. காரணம் பல தியேட்டர்கள் காற்று வாங்கத் துவங்கிவிட்டடன.

    ஏஜிஎஸ்

    ஏஜிஎஸ்

    சென்னை ஏஜிஎஸ் சினிமாஸில் இன்று மதியம் 3.30 மணி காட்சிக்கு இதுவரை ஒரு சிலரே டிக்கெட் வாங்கியுள்ளனர். தியேட்டர் காற்று வாங்குவதை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. இரண்டாவது நாளே இப்படியா?. நல்ல விமர்சனம் கிடைத்தும் ஏன் இப்படி?

    ஐநாக்ஸ்

    ஐநாக்ஸ்

    சென்னையில் இப்படி என்றால் பெங்களூரிலும் அதே நிலைமை தான். ஐநாக்ஸ் மால், ஃபோரம் மாலில் உள்ள பி.வி.ஆர். தியேட்டர்களில் பல இருக்கைகள் காலியாக உள்ளன.

    மும்பை

    மும்பை

    சென்னை, பெங்களூர் மட்டும் அல்ல பாலிவுட் ஜாம்பவான் அக்ஷய் குமாரின் ஊரான மும்பையிலும் 2.0 படம் ஓடும் தியேட்டர்கள் காற்று வாங்குவது வியப்பளிக்கிறது. வார இறுதி நாட்களில் ஹவுஸ்ஃபுல்லாகும் என்று நம்புவோமாக.

    டிக்கெட்

    டிக்கெட்

    கோவையிலும் 2.0 படம் ஓடும் தியேட்டர்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பவில்லை. படம் ரிலீஸான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் வெளியாவது இதற்கு ஒரு காரணம் என்று கூறலாமோ?

    English summary
    The condition of theatres showing 2.0 is shocking as many seats are empty on the second day itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X