எப்படி இருந்த கங்கை அமரன் இப்படி ஆகிவிட்டாரே!
சென்னை: எப்படி இருந்த கங்கை அமரன் இப்படி ஆகிவிட்டாரே என்று நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாடகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் அவர் ஆசிர்வாதம் அளித்து ட்வீட் போட்டார்.
நன்றி தெரிவிப்பதற்கு பதில் கங்கை அமரன் ஆசி வழங்கியிருந்தார்.
புகைப்படம்
ஆசி அளித்து வெளியிட்ட ட்வீட்டில் கங்கை அமரன் தான் நீளமான தாடியும், பல மாதங்களாக வெட்டாமல் வைத்துள்ள தலைமுடியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

நீங்களா?
கங்கை அமரனின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே என்று தெரிவித்துள்ளனர்.
சாமியாரா?
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தால் ஆசி எல்லாம் கொடுக்கிறீர்களே, என்ன சாமியார் ஆகிவிட்டீர்களா என்று கங்கை அமரனிடம் நெட்டிசன்கள் கேட்டுள்ளனர்.
கிண்டல்
இதற்கு தான் அரசியல் பக்கம் போகாதீர்கள் என்று சொல்வது. பாருங்க எப்படி ஆகிவிட்டீர்கள் என்று சிலர் அவரை கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











