டிவி நிகழ்ச்சியில் சக நடிகைக்கு பளார் விட்ட இந்தி நடிகை
மும்பை: காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை ஜோயா சக நடிகையான சோனாலி ரவுத்தை கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்தி படமான தி எக்ஸ்போஸில் நடித்துள்ளனர் சோனாலி ரவுத் மற்றும் ஜோயா அப்ரோஸ். அவர்கள் இருவரும் தங்கள் படத்தை விளம்பரப்படுத்த காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.

படப்பிடிப்பு
ஏற்கனவே படப்பிடிப்பின்போது ஒரு காட்சியை படமாக்குகையில் ஜோயா மற்றும் சோனாலிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதை பார்த்த படக்குழுவினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.

ம்க்கும்
இந்த சண்டையை அடுத்து ஜோயாவும், சோனாலியும் ஒருவரை பார்த்தால் மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர்.

டிவி நிகழ்ச்சி
சண்டை போட்ட அவர்கள் காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சியில் என்ன கூத்து எல்லாம் செய்யவிருக்கிறார்களோ என்ற பயம் படக்குழுவுக்கு இருந்தது.

மிரட்டல்
மேக்கப் வேனில் ஜோயாவை பார்த்த சோனாலி பழைய சண்டையை நினைவுபடுத்தியதோடு நிகழ்ச்சியில் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றால் உன்னை அடிப்பேன் என்று கூறியுள்ளார்.

அறை
சோனாலியின் பேச்சைக் கேட்டு கடுப்பான ஜோயா அவரின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார். உடனே பதிலுக்கு சோனாலி ஜோயாவை அறைந்தார். இதை பார்த்த தி எக்ஸ்போஸ் நடிகர் ஹிமேஷ் ரேஷ்மய்யா ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்து பிரித்துவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











